6. உலகெல்லாம் சுவிசேஷம் அறிவியாதபடி சபை ஏன் தவறிவிட்டது?
அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 4:35 என் சிநேகிதர்களே, என்னை எப்போதும் நடுங்கச் செய்யும் இவ்வாக்கியம் இக்காலத்திலும் எவ்வளவு உண்மையுள்ளதாயிருக்கிறது!
இயேசு கிறிஸ்து சுவிசேஷத்தை உலகமெங்கும் பிரசங்கம்பண்ணுங்கள் என்று சொல்லி 2000 வருடங்களான போதிலும், இன்னும் ஆயிரக்கணக்கான ஜாதியார் சுவிசேஷம் இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். இந்தியாவிலும், சீனாவிலும் அப்படியிருக்கிறார்கள். உலக ஜனத்தொகையில் நூற்றுக்கு அறுபத்தைந்து பேருக்கு இன்னும் சுவிசேஷம் அறிவிக்கப்படவில்லை.
நாம் செய்யக்கூடாததைச் செய்யும்படி கடவுள் கட்டளையிடமாட்டார். கட்டளையோடுகூட அதைச் செய்யும் படியான பெலனையும் அருளுவார். "சுவிசேஷம் சகல ஜாதிகளுக்கும் பிரசங்கிக்கப்படவேண்டும்." நாம் அதைச் செய்திருக்கக்கூடும். பின் ஏன் அது பிரசங்கிக்கப்படவில்லை?
1. சுவிசேஷத்திற்குச் சத்துருக்கள் இருக்கிறார்கள். இதற்கு முன் இல்லாத சத்துருக்கள் இக்காலத்தில் இருக்கிறார்கள். அவைகளின் ஒன்று கள்ள மதங்கள்; மற்றது பொது உடமைக்கட்சி கள்ள மதங்கள் எக்காலத்திலும் சுவிசேஷத்திற்குச் சத்துருக்களயிருக்கின்றன. முகம்மது மார்க்கமும், ரோமன் கத்தோலிக்க மார்க்கமும் அப்படிப் பட்டவைகள். இவ்விரண்டும் மனிதர்களுக்குச் சுயாதீனத்தைக் கொடுக்கிறதில்லை. ரோமன் மார்க்கம் ஏகாதிபத்தியத்தைக் கையாடி, பயமுறுத்தி மனிதர்களை அடிமைத்தனத்தில் வைக்க முயலுகிறது. அது செல்வாக்குச் செலுத்தும் இடங்களிலுள்ள கிறிஸ்தவர்கள் உபத்திரவங்களையும், சித்திரவதைகளையும், மரணத்தையும் அனுபவிக்கிறார்கள். இம்மதம் இரக்கம் காட்டுகிறதில்லை. புராட்டெஸ்டண்டு மதம் ஒன்றே சுயாதீனத்தில் நம்பிக்கை கொள்ளவும், ஜனங்களுக்குச் சுயாதீனத்தைக் கொடுக்கவும் கூடும். சாத்தான் சாமர்த்தியத்துடன் உபயோகித்துவரும் மிகக்கொடூரமான ஆயுதம் பொதுவுடமை என்பதே. இக்கொள்கை அதிதீவிரமாய்ப் பரவிவருகிறது. எல்லா தேசங்களிலும் கிறிஸ்து மார்க்கத்தை இது தாக்குகிறது. தென் அமெரிக்காவில் மட்டும் தன் கட்சியில் 10 லட்சம் ஜனங்களிருக்கிறார்கள் என இது பெருமை பாராட்டுகிறது. நாத்தீகம் இதன் ஆதாரமாயிருப்பதால் எம்மதத்தோடும் இது சேருகிறதில்லை அநேகரைப் பயங்கரத்துக்குள்ளாக்கியிருக்கிற இக்கொள்கை ஒரு நச்சுப் பொய்கையாயுமிருக்கிறது. இது சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறவர்களைக் கூடியவரை தடை செய்கிறது.
மேற்கூறியவைகளே சுவிசேஷத்தைத் தடுக்கிற பெரிய சத்துருக்கள். ஆயினும் எவ்வித எதிர்ப்புக்களிலிருந்தாலும் கடவுளுடைய கட்டளைப்படி நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். நமது ஆண்டவரின் உத்தரவு என்ன? "இதோ சத்துருவினுடைய சகலவல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்" (லூக்கா 10:19) என்பதே எவ்வித சத்துருவையும் மேற்கொண்டு உலகத்தில் சுவிசேஷத்தை அறிவிக்கச் சுவிசேஷத்தில் வல்லமையிருக்கிறது. "விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு சுவிசேஷம் தேவ பெலனாயிருக்கிறது. (ரோமர் 1:16)
2. நாம் கல்வியை முக்கியப்படுத்துகிறோம். கல்வி வேண்டாம் என்று நான் சொல்லுகிரதில்லை. பாடசாலைகள் அவசியமே, ஆனால் மூடி, பில்பாட், ஜிப்சி ஸ்மித் முதலானவர்களைப் போன்றவர்கள் கல்வி அறிவு அதிகம் இலாவிட்டாலும் தங்களுக்குக் கடவுள் கொடுத்த தாலந்துகளைக் கொண்டு மிகச் சிறந்த வேலை செய்தார்கள். தற்காலத்தில் பட்டத்தையே ஜனங்கள் மிகவும் விரும்புகிறார்கள். ஆயினும் சிலர் பட்டம் பெற்றும் பயனில்லாதவர்களாகக் காணப்படுகிறார்கள்.
பிரேன்சன் என்பவர் ஹட்சன் டெயிலரிடம் 100 புது மிஷனெரிமார்களை அனுப்பி வைத்தார். அவர்களில் சிலர் படிப்பில்லாதவர்களும், சிலர் சொற்பப் படிப்புள்ளவர்களாயுமிருந்தார்கள். இதைக் கண்டு டெயிலன், பிரேன்சன் என்பவரைக் கண்டித்து, இப்பேர்ப்பட்ட ஆள்களை ஏன் அனுப்பினீர் என்று கடிதம் எழுதினார். இரண்டு வருடம் சென்ற பின் அவர் எழுதினதாவது "நான் இவர்கள் வேலையைக் கண்டேன்". மிகவும் நன்றாக ஊழியம் செய்கிறார்கள். இவர்கள் ஆவியின் நிறைவைப் பெற்றவர்கள். இங்குள்ள பாஷையைக் கற்க கடவுள் அவர்களுக்கு ஞானத்தைத் தந்து, அவர்கள் முயற்சிகளை ஆசீர்வதித்தார். ஆகவே இப்படிப்பட்ட அநேக மிஷனெரிகளை இன்னும் அனுப்பிவையுங்கள்" என்பதே. அயல் நாட்டுக்குப் போக விரும்பும் சகோதரர்களை நான் பார்த்து "நீங்கள் எவ்வளவு கல்வி கற்கக்கூடுமோ அவ்வளவையும் கற்றுக்கொள்ளுங்கள்" என்று சொன்ன ஒரு காலமுண்டு. இப்பொழுதோ நான் அப்படிச் சொல்லமாட்டேன் ஏனெனில், சில படிப்பு மோசமாய் முடிகிறது. அநேகர் B.A., M.A., பட்டம் பெற வெகுவாய் ஆசித்துக் கடைசியில் தங்கள் விசுவாசத்தை இழந்துவிடுகின்றனர். சிலருக்கு அப்படிப்பு அவசியம். ஆனால் சிலரோ அப்படிப்பு இல்லாமலே நல்ல வேலை செய்யக்கூடும். ஆகவே இதற்குப் பொதுவிதி ஒன்றுமில்லை.
தற்காலத்திலுள்ள வேத கலாசாலைகள் பட்டத்தை மாணவர்களுக்குக் கொடுக்கிறதாக மட்டும் இருக்கின்றன. மூளை அறிவு விசேஷம் அல்ல! உள்ளத்தில் இருக்கிறது தான் விசேஷம், சிம்சன், மூடி என்பவர்கள் கடவுளுக்கு ஊழியஞ் செய்யக்கூடிய கல்வியைக் கொடுப்பதற்காகவே வேத கலாசாலைகளை ஏற்படுத்தினார்கள். வேதத்தைத் தெளிவுறக் கற்பதே மிகவும் முக்கியம். மற்றக் கல்வி எல்லாம் இரண்டாவது ஸ்தானத்தில் வைக்கவேண்டியதே.
உயர்ந்த படிப்புள்ளவர்களைப் பரிசுத்தாவியானவர் ஆண்டு நடத்தினால் அதிகப் பிரயோஜனமுள்ளவைகளாயிருப்பார்கள். ஆனால் அதே ஆவியானவர் படிப்பில்லாதவர்களையும் வல்லமையாய் உபயோகிக்கக்கூடும். அநேகர் பட்டம் பெற்றவுடன் சகலமும் முடிந்துவிட்டது என நினைக்கிறார்கள். அது தவறு. ஊழியம் செய்து கொண்டு அநேக புத்தகங்களைப் படிக்கவேண்டும். ஜிப்சி ஸ்மித் என்பவர் பாடசாலைக்கே போனவரல்ல, என்றாலும் தாமாகவும் வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டவர். அநேகப் பட்டதார்களைப் பார்க்கிலும் அவர் யாதொரு பிழையுமின்றி இலக்கண முறையில் பேசுவார். மூளை அறிவைவிட அனுபவ அறிவே மேலானது. அநேக வேத சாஸ்திரக் கல்லூரிகள் மாணவர்களுக்கு மூளை அறிவை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறதில்லை. மாணவர்கள் பொதுக் கூட்டங்களில் எப்படி பேசவேண்டும் என்றும், சுவிசேஷக் கூட்டங்களை எப்படி நடத்தவேண்டும் என்றும், எப்படி விளம்பரம் செய்யவேண்டும் என்றும், விசேஷித்த எழுப்புதல் கூட்டங்களை எவ்வாறு ஒழுங்கு செய்து நடத்த வேண்டும் என்றும் வேத கலாசாலைகள் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். இவைகளே சுவிசேஷ ஊழியத்திற்கு மிகவும் பிரயோஜனமானவை.
3. அநேக வாசல்கள் அடைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் திறந்திருக்கும் வாசலைக் குறித்தென்ன? ஏன் அவைகளுக்குள் பிரவேசிக்கக்கூடாது. நாம் பிரவேசிக்ககூடிய அநேக வாசல்கல் திறவுண்டிருக்கையில் ஏன் அதிக நேரம் அடைக்கப்பட்டிருக்கும் வாசல்களுக்காக ஜெபிக்கவேண்டும்? பவுல் அப்போஸ்தலன் அடைக்கப்பட்ட வாசல்களைவிட்டுத் திரும்பித் திறந்திருக்கும் வாசல்களை நோக்கிச் சென்றார் அல்லவா? எவ்விடங்களிலும் திறவுண வாசல்களிலிருக்கின்றன. ஆகவே நாம் அவைகளுக்குள் பிரவேசித்து, கடவுள் தமக்குச் சித்தமான வேளையில் அடைக்கப்பட்டிருக்கும் வாசல்களைத் திறக்கும்படி விட்டுவிடுவோமாக, நாம் எந்த இடத்தில் எந்த நேரத்தில் வேலை செய்யவேண்டுமென்று அவர் அறிந்திருக்கிறார். அதை நமக்குத் தெளிவாகக் காட்டுவார்.
4. புறமதஸ்தரின் மதங்கள் அவர்களுக்குப் போதும் என்று நாம் நினைக்கிறோம். அறியாமையால் சிலர் சொல்லுகிறதாவது: புறமதஸ்தரின் மதங்கள் அவர்களுகுத் திருப்தியைக் கொடுக்கிறது. அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்கிறது என்பதே. இது சரியா? அவர்கள் இருக்கவேண்டிய பிரகாரம் சந்தோஷமாயிருக்கிறார்களா?
அல்ஜீரியாவிலுள்ள ஒரு முகமதியனை நான் அறிவேன். அவன் ஒரு கத்தியால் இரத்தம் ஓடுமட்டும் திரும்பத் திரும்பத் தன் தலையில் வெட்டுவான். அதன்பின் காகிதத்தை எடுத்து அதில் ஒட்டி வைத்து, அதில் நெருப்பு வைப்பான். அது எவ்வளவு வேதனையாயிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். ஏன் தன்னையே இப்படிச் சித்திரவதை செய்கிறான்? அவன் மதம் அவனுக்கு அப்படிப் போதிக்கிறது. மோட்சத்தில் அவன் தனக்குப் புண்ணியத்தை சேர்த்துக்கொள்ளுகிறானாம். நீ அவனது மார்க்கத்தைக் தழுவிக்கொண்டு அவன் செய்கிறதுபோல செய்வாயா?
ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு ஜாதியாரின் ஒரு பிள்ளை பிறந்தவுடன் என்ன நடக்கும் தெரியுமா? யாரோ ஒருவர் நோய்வாய்ப்பட்டோ அல்லது மரித்தோ இருக்கலாம். அதற்காகத் தங்கள் தெய்வத்திற்குப் பலியிடும்படி, தாய் பந்ததோடு தடுத்தாலும், வைத்திய மந்திரவாதி பிறந்த சிசுவைப் பிடித்து, அதன் வாயில் மண்ணை நிரப்பி அதைக் கொல்லுவான். ஏன் அவ்வாறு செய்கிறான் அவனது மதம் அப்படிச் செய்யும்படி அவனைக் கட்டாயப்படுத்துகிறது அசுத்த ஆவிகளை எப்படியாவது சாந்தி பண்ணவேண்டுமாம். அந்தக் குழந்தையின் தாய்க்கு அது சந்தோஷமா? என்றாலும் அவர்களுடைய மதம் அவர்களுக்கு நன்றாயிருக்கிறது என்று நீங்கள் என்னிடம் சொல்லுகிறீர்கள். அம்மதத்தை மாற்றி, வேறு மதத்தை அவர்களுக்குக்கொடுக்கமாட்டீர்களா? நீ அந்தத் தாயாக இருக்க விரும்புவாயா? மறுபடியும் நீயே பதில் சொல்.
அப்பிரிக்காவில் இரட்டைப் பிள்ளைகள் பிறந்தால், அவைகளை உடனே கொன்றுவிடுவார்கள். கடவுள் உனக்கு இரட்டைப் பிள்ளைகளைக் கொடுத்தால் நீ அப்படிச் செய்ய விரும்புவாயா? ஆப்பிரிக்காவில் ஜீவித்தால் நீ அப்படி செய்யவேண்டியதாகும் ஏனெனில் உன் மார்க்கம் அப்படிச் செய்யவேண்டுமென்று உன்னைக் கட்டாயப்படுத்தும் இந்தியாவில் உடன் கட்டை ஏறும் கொடிய பழக்கம் இருந்தது. கணவன் இறந்தவுடன், மனைவியையும் பிணத்துடன் சேர்த்து இறுகக்கட்டு, உயிருடன் தீக்கொளுத்துவது வழக்கம். மக்கள் ஆயிரக்கணக்கில் அப்படி மரித்தார்கள். அவ்வாறு ஏன் செய்தார்கள்? இந்துமதமே அதற்கு காரணம் இம்மதம் அவர்களுக்குச் சந்தொஷத்தைக் கொடுத்ததா?
ஆப்பிரிக்காவிலுள்ள அநாகரிகமான மக்களின் வழக்கம் என்னவென்றால், தங்கள் தலைவன் இறந்துபோனால் அவனுடைய விதவைகள் 30, 60 அல்லது 100 பேர்களை அவனோடு சேர்த்து உயிருடன் குழ்ஹியில் போட்டு புதத்துவிடுவார்கள். இப்பேர்பட்ட மதத்தில் நீ திருப்தியடைவாயா?
தெசமுத்திரத் தீவுகளில் நான் கண்ட அனுபவத்தைக் கடைசியாகக் கூறுகிறேன் ஒரு கணவன் இறந்தால் அவனுடைய விதவையைத் தூக்கிலிட்டுக் கொல்லுவார்கள். இதைச் செய்ய வேண்டுயவன் அவளுடைய மூத்தகுமாரன். அவன் மற்றத் தன் சகோதர சகோதரிகளையும் கொன்று போடுவது வழக்கம். இப்படிப்பட்ட கொடூரமான பழக்கத்தையுடைய மதம் உனக்குத் திருப்தியா? அப்படியானால் நீ எப்படி அவர்களுடைய மதம் அவர்களுக்குத் திருப்தியளிக்கிறது என்று சொல்லலாம். புறமதஸ்தரின் மதங்கள் பயங்கரமானவைகள். அவர்கள் சமாதானத்தையும், அன்பையும் குறித்து ஒன்றையும் அறியமாட்டார்கள். அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. கிறிஸ்து மார்க்கம் ஒன்றே அவர்களுக்கு ஜீவனையும், உள்ளத்திற்க்த் திருப்தியையும் கொடுக்கக்கூடியது.
5. போதுமான ஊழியரில்லை. சீனாவிலுள்ள விஸ்தாரமான வயல்களில் கையினாலேயே அறுவடை செய்ய வேண்டியதிர்க்கிறது. எனினும் அவைகள் அறுக்கப்படுகின்றன எப்படி? அரிவாளைப் பிடிக்கக்கூடிய ஒவ்வொரு ஆணும், பெண்ணும், சிறுவனும் சிறுமியும் வயலுக்குப் போய் அறுக்கின்றனர். வேலைக்காரன் ஏராளமாய் இருக்கிறார்கள்.
நமது கர்த்தர் ஊழியர் தேவை என்று உணர்ந்தார். "அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம், ஆதலால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்" (மத் 9: 37, 38) நம்மிடம் ஏராளமான வேலையாள்கள் இருந்தால்மட்டும் வேலையைச் செய்து முடிக்கலாம். ஆகவே, நாம் அடிக்கடி வாலிபரைச் சுவிசேஷ ஊழியத்திற்குபோகும்படி வேண்டிக்கொள்ளுகிறோம். ஊழியர் தேவை.
6. நாம் பவுலின்முறைகளை கையாளவில்லை. பவுல் அப்போஸ்தலனின் முறை 2தீமோத்தேயு 2:2 இல் கூறப்பட்டிருக்கிறது "அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி." மற்றவர்களுக்குக் கர்ருக்கொடுப்பதே பவுலின் முறை. கற்றாவுடன் இவர்கள் மற்றாவர்களுக்குத் கற்பிக்க வேண்டியது. இவ்விதமாக ஊழியர்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுப் பயிற்சி அடைந்தார்கள். தற்காலத்தில் மேற்கூறிய முறையை வேத கலா சாலையின் மூலம் நாம் கையாடலாம். புதிதான ஓர் இடத்திற்குப் போனவுடன் அங்கு நாம் செய்யவேண்டிய முதற்காரியம் ஒரு வேத கலாசாலையை ஏற்படுத்துவதே. அக்கலாசாலையில் தகுதியான ஊழியர்களைச் சேர்த்து, பயிற்றுவித்துப்பின்பு அவர்களைத் தங்கள் சொந்த கிராமங்களுக்குச் சுவிசேஷகர்களாக அனுப்பவேண்டும். ஒவ்வொரு ஊருக்கும் பட்டணத்திற்கும், நகரத்திற்கும் ஒரு மிஷனெரி இருக்க முடியாது. அப்படியிருந்தாலுங்கூட அவர் தகுதியாய் இருக்கமாட்டார். "கூட்டுக்காடையை வைத்தே, காட்டு காடையைப் பிடிக்கவேண்டும்" என்ற வழக்கப்படி, சொந்த ஊரைக் கர்த்தருக்கென ஆதாயப்படுத்துவதில் திறமைசாலிகளாயிருபார்கள். அதுவே தகுந்த முறை. இயேசுநாதர் முதலின் 15 பேரையும், அதன்பின் 70 பேரையும் பயிற்றுவித்தார். பவுல் ஒருபொழுதும் ஒரு ஸ்தலத்துச் சபைப் போதகராய் இருக்கவில்லை. அவர் ஆத்துமாக்களை ஆதாயம் செய்து, அங்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, அதன் பின் வேறு இடத்திற்குப் போனார். அந்தந்த ஊரிலுள்ளவர்களே அந்தந்தச் சபையை நடத்தும்படி ஒழுங்கு செய்தார். முதலிலிருந்தே ஒவ்வொரு சபையும் சுய ஆதரவைக் கைக்கொள்ளும்படி செய்தார். அவர்கள் உயிருள்ள அவயவங்களாயிருந்தார்கள். உயிருள்ள அவயவங்களே வளரும்.
அப் 19: 8-10; 18-20 இல் பவுலின் முறை சிறந்த விதமாய்க் காட்டப்பட்டிருக்கீறது. இரண்டு வருடக்காலங்களில் ஆசியாவிலுள்ளவர்கள் யாவரும் சுவிசேஷத்தைக் கேட்டதாக வாசிக்கிறோம். ஆசியா சுமார் 50,000 சதுரமைலுள்ள நாடு. அங்கே ஒரு வல்லமையான எழுப்புதல் உண்டானது. மந்திரவாதிகள் தங்கள் புத்தகங்களைக் கொண்டுவந்து எல்லாருக்கும் முன்பாக தீக்கொளுத்தினார்கள். அப்புத்தகங்கள் ஆயிரக்கணக்கான ரூபாய் பெறும். இவ்வாறு நடைபெறக் காரணம் என்ன? பவுல் ஒரு பாடசாலையைத் திட்டம் செய்து அங்கு தினமும் வேத புத்தகத்தைக் கற்றுக் கொடுத்தார். கற்றுக்கொண்டவர்கள் தங்கள் தங்கள் கிராமங்களுக்குப் போய் மற்றாவர்களுக்குக் தாங்கள் கற்றதைக் கற்பித்தார்கள். அவர் போன இடமெல்லாம் பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் செய்தார் (அப் 19:21), இதே முறிஅயை நாமும் கையாளுவதே உசிதம். இதைவிடச் சிறந்த முறை வேறில்லை.
இதே முறையை மேற்கு இந்திய உஷன் அனுசரித்து வந்தது. அவர்கள் கியூபாவில் ஒரு வேத பாடசாலையை ஆரம்பித்தனர். சபையை அவர்கள் ஆரம்பிக்கவில்லை என்பதைக் கவனிக்கவும். பின்பு ஹேய்ட்டி என்னுமிடத்தில் மற்றொரு வேத கலாசாலையை ஆரம்பித்தனர். மேலும் கோமீனிகன் (Dominican Republic) என்னுமிடத்திலும், ஜமைக்காவிலும் ஏற்படுத்தினர். ஐந்தாவதாக பிரெஞ்சுத்தீவுகளில் ஆரம்பித்திருக்கிறார்கள். அவைகளின் பலன் என்ன? மேற்கூறிய வேதகலாசாலைகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் மேற்கிந்தியக் தீவுகளுக்கும் பரவிச் சென்று சுவிசேஷத்தை அறிவித்தப்டியால் 80,000 க்கு மேற்பட்டவர்கள் இரட்சிக்கப்பட்டுக் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள்.
இதற்கு இந்திய மிஷன் அங்கு செல்லுமுன் பெரிய பட்டணங்களிலும், நகரங்களிலும் ஆலயங்கள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் கிராமங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்படவேயில்லை. இந்த மிஷன் அங்கு சென்று பவுலின் முறிஅயைக் கையாடினபடியால் இப்பொழுது வருடாந்தரக் கூட்டங்களின் தொகை 7,000, கர்த்தரின் வசனம் இவ்வளவாய்ப் பெருகி விருத்தியடைந்திருக்கிறது. இத்தியோப்பியாவிலும் மிஷனெரிமார் அதிகமான முயற்சி செய்தும் சில விசுவாசிகள் மட்டும் இருந்தார்கள். அதன்பின் சுதேசிகளே சபையின் பொறுப்பை எடுத்து நடத்த ஆரம்பித்தனர். பலவகை உபத்திரவங்களிலிருந்தும் 20,000 பேர் கிறிஸ்துவுக்காக ஆயத்தப்படுத்தப்பட்டனர். தற்சமயம் அங்கு 50,000 கிறிஸ்தவர்களிருக்கிறார்கள். 300 சுதேச திருச்சபைகளும் இருக்கின்றன என்ன அதிசயம் இதுவே சரியான முறை.
இவ்வகை முறையினால் செலவு சுருங்கும். சுதேச சபைகள் தங்கள் சொந்த ஸ்தலத்து ஊழியர்களையும், மிஷனெரிகளையும் போஷிக்கக்கூடும். சுய ஆதரவும், சுய ஆளுகையும், சுயமாய் சுவிசேஷத்தை அறிப்பதும் நடைபெறும். இதுவே சத்திய வேதம் காட்டும் முறை பவுலின் மாதிரியைவிட வேறு உசிதமான வழியில்லை.
7. கிறிஸ்து அற்றவர்கள் ஆக்கினைக்குட்பட்டவர்கள் என்று நாம் அவ்வளவாய் உணருகிறதில்லை மனிதர் கிறிஸ்து இல்லாமல் ஆக்கினைக்குட்பட்டவர்கள் என்றும், சுவிசேஷத்தின் மூலமாகவே இரட்சிப்படையக் கூடும் என்று வேதம் தெளிவாய்ப் போதிக்கிறது. பவுல் புறமதஸ்தரின் நிலைமையைப் பின்வரும் பதங்களால் காட்டுகிறார். "அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்கள், கோபாக்கினையின் பிள்ளைகள், நம்பிக்கையில்லாதவர்களும் தேவனற்றவர்களும்" (எபே 2: 3, 12) அவர்கள் முற்றிலும் ஆக்கினைக்குள்ளாக இருக்கிறார்கள். இதை நிவிர்த்திக்கும் வழியைக் காட்டும் இரண்டு வாக்கியங்களாவன "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பிலை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை" (அப் 4:15) புறமதஸ்தரின் எந்தத் தெய்வத்தாலும் மார்க்கத்தாலும் பிரயோஜன்ம இல்லை முகமது, புத்தர் மற்றும் எவராலும் அல்ல, கிறிஸ்து ஒருவரே மனிதரை இரட்சிக்கக்கூடியவர். இயேசு சொன்னதாவது: "என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்" (யோவான் 14:6). கடவுளிடத்திற்குச் செல்லும் வேறு வழி இல்லை. கிறிஸ்துவாகிய வழியின்றி மற்றைய வழி அழிவுதான். "நானேவழி" என்று சொல்லியிருக்கிறார். வேறே வழியில்லை புறமதஸ்தர்களுக்கு ஆக்கினை இல்லை என்றால் இவ்விரண்டு வசனங்களுக்கும் அர்த்தமேயில்லை.
கடவுள் அன்புள்ளவரல்லவா, அவர் மனிதர்களை நித்தியமாய் அழிவிலேயே விட்டுவிடுவாரா, இது அநியாயம் அல்லவா, எனச் சிலர் சொல்லுவார்கள். கடவுள் நம்மை இரட்சிப்பது அவருடைய கடமையா? அப்படியானால் இரட்சிப்பு கடவுளின் கிருபை என்று சொல்ல முடியாதே. அது கடவுள் கட்ட வேண்டிய கடனாகுமே! அப்படியில்லாமல் கடவுள் நம்மை இரட்சிப்பது அவரது சுத்தக் கிருபையே, "சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ?" ஆம், கடவுள் செய்வது முற்றிலும் நீதியே, அநீதி அவரிடம் ஒன்றும் இல்லை. "அவருடைய நியாயத் தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்" (வெளி 16:7).
தண்டனையில் பல தரங்களுண்டு. புறமதஸ்தர்கள் கிறிஸ்து இல்லாமல் ஒருக்காலும் மோட்சம் செல்லமுடியாது ஆனால் மட்டமாய்த் தண்டனை அடைவார்கள். இதன் விபரம் இப்போது இரகசியமாகவே இருக்கிறது. பின்னால் தெளிவாய் அறிவோம். அதற்குள்ளாக நாம் அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவித்து, அவர்கள் கிறிஸ்துவண்டைவரும்படி நம்மால் கூடியதையெல்லாம் அவர்களுக்குக் செய்வதே நமது கடமையும் உத்தரவாதமுமாயிருக்கிறது.
மறுபடியும் தவறவேண்டாம்:
நாம் அனைவரும் தேவ சித்தம் செய்ய விரும்புகிறோம். உலக முழுவதும் சுவிசேஷம்கூறி அறிவிப்பதே அவருடைய பிரதான சித்தம். நாம் கடந்த காலத்தின் தவறினாலும் திரும்பவும் தவற வேண்டாம். "இன்று" என்றெண்ணப்படுமளவும் நாம் அவ்வேலையைச் செய்வோமாக. ஏன் நம்முஐய தலைமுறையிலேயே இவ்வூழியத்தைச் செய்து நிறைவேற்றக்கூடாது? கடவுள் தம்முடைய ஊழியத்திற்கு உன்னை அழைத்து அனுப்ப நேரிட்டால் ஆவியானவரின் சத்தத்திற்கு உடனே கீழ்ப்படி. "கர்த்தாவே, இதோ அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்" எனப் பதில் சொல்லு, அலல்து உன்பதிலாளை அனுப்பும்படி விரும்புகிறார். பணத்தைத் தேடி அதை உன்னுடைய பதிலாளுக்கு அனுப்பு. அவர் உன்னை ஜெபிக்கும்படி அழைக்கிறார். தவற வேண்டாம். சுவிசேஷ வேலையை நினைத்து கர்த்தர்டம் வேண்டிக்கொள். உலக முழுவதும் சுவிசேஷம் அறிவிக்குமட்டும் ஜெபித்துக் கொண்டேயிரு.