Thursday, February 4, 2010

ஆத்தும வாஞ்சை, ஆஸ்வால்ட் ஜே. ஸ்மித்

3. "சுவிசேஷத்தை ஒவ்வொருவரும் ஒரு முறை கேட்பதற்குமுன் ஒருவன் ஏன் இருமுறை கேட்கவேண்டும்?"

"இயேசு சகல பட்டணங்களையும் சுற்றி நடந்தார்" (மத் 9:34-38). சகல பட்டணங்களையும் கிராமங்களையும் என்பதைக் கவனியுங்கள். அவர் ஒரே ஜாதியாரிடத்தில் தங்கியிருக்கவில்லை. அவர் ஒருபோதும் ஸ்தலத்துச் சபை போதகராக இல்லை. அவர் தொடர்ச்சியாகப் போய்க்கொண்டேயிருந்தார். "இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து ஜெபாலயங்கைல் உபதேசுத்து, ஜனங்களுகு உண்டாயிருந்த சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கி அவர்களைச் சொஸ்தமாக்கினார்."

"அவர் திரளான ஜனங்களைக் கண்டபோது அவர்கள் மேல் மனதுருகினார்." ஏனென்றால் "அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தோய்ந்துபோனவர்களும், சிதறப்பட்டவர்களுமாய்" இருந்தார்கள். திரளான ஜனங்களைக் காணும் நாமும் அவர்கள் மேல் மனதுருகுகிறோமா?

"அதன்பின் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி அறுப்புமிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்"
என்றார் அக்காலத்திலும், இக்காலத்திலும் இது ஒரு பெரிய பிரச்சனை. "அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்" இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வழி என்ன? அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாள்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளவேண்டும். என்

தாய் நாட்டிலேயே நான் தங்கியிருக்கலாமா?

சத்திய வேதத்தை ஆராய்ந்தபோது, நான் கனடாவிலேயே சௌகரியமாய் ஒரு போதகராயிருந்து கொண்டே க‌ட‌வுளின் க‌ட்ட‌ளைக்குக் கீழ்ப்ப‌டியமுடியாதென‌க் க‌ண்டுக்கொண்டேன். அது எப்ப‌டியெனில், சுவிசேஷ‌ம் உல‌க‌ம் முழுவ‌த‌ற்கும்
பிர‌ச‌ங்கிக்க‌ப்ப்ட‌வேண்டுமென்றும், ஒவ்வொரு ஜாதியும், ஜ‌ன‌மும், பாஷைக்கார‌ரும், சுவிசேஷ‌த்தைக் கேட்க‌வேண்டுமென்றும் நான் அறிந்தேன்.

அதை அறிந்த‌வுட‌ன் நான் கேட்ட‌ கேள்வியாதெனில், எல்லா ஜாதியாரும் க‌ன‌டாவில் வ‌சிக்கிறார்க‌ளா? அப்ப‌டியிருந்தால் நான் என் சொந்த‌ தேச‌த்திலிருந்துகொண்டே சுவிசேஷ‌த்தை அறிவிக்க‌லாம். ஆனால், ஒரு ஜாதியார் க‌ன‌டாவுக்கு வெளியே குடியிருந்தால் நான் புற‌ப்ப‌ட்டுப் போய் அவ‌ர்க‌ளுக்குச் சுவிசேஷ‌த்தை அறிவிக்க‌வேண்டும். அல்ல‌து, நான் போக‌ முடியாவிட்டால் என‌க்குப் ப‌திலாக‌ ஆள்க‌ளைக் க‌ண்டுபிடித்து அவ‌ர்க‌ளை என் பிர‌தினிதிக‌ளாக‌ அனுப்ப‌வேண்டும். இவ்விர‌ண்டில் ஏதாவ‌து ஒன்றை நான் செய்யாம‌ற்போனால் க‌ர்த்த‌ரின் ச‌முக‌த்தில் நான் வெறுங்கைய‌னாய் நிற்க‌வேண்டிய‌தாகும் என்ப‌தாக‌ அறிந்தேன்.

என் சிநேகிதா! உன் காரிய‌ம் எப்ப‌டி? க‌ட‌வுளின் ந‌ற்செய்தி ச‌க‌ல‌ ஜாதியாருக்கும்,
ஜன‌த்தாருக்கும், பாஷைக்கார‌ருக்கும் அறிவிட்ட‌ப்ப‌ட‌வேண்டும் என்ப‌தை நீ
அறிதிருக்கிறாயா? நீ அத‌ற்காக‌ என்ன‌ செய்துகொண்டிருக்கிறாய்? நீ என்ன‌
செய்ய‌ப்போகிறாய்? ஒன்று நீ போக‌வேண்டும், அல்ல‌து உன‌க்குப் ப‌திலாக‌ வேறு ஒருவ‌ரை நீ அனுப்ப‌வேண்டும். ஈ ஒன்றும் செய்ய‌வில்லையானால் உன‌க்கு ஐயோ! நாம் க‌ட‌வுளின் க‌ட்ட‌ளைக‌ளுக்குக் கீழ்ப்ப‌டிந்து, அவைக‌ளை நிறைவேற்ற‌வேண்டும். இல்லையேல் தேவ‌ கோப‌த்திற்கு நாம் த‌ப்ப‌முடியாது.

நான் போக‌ முய‌ற்சித்தேன்

நான் 18 வ‌ய‌தில் பிரிட்டிஷ் கொல‌ம்பியாவிலுள்ள‌ இந்திய‌ர்க‌ளிட‌ம் சென்றேன்.
சுமார் 4000 மைல்க‌ளுக்க‌ப்பால், அலாஸ்காவின் ப‌க்க‌த்தில் இந்திய‌ர்க‌ள்
குடியிருந்த‌ இட‌த்தில் நானும் த‌ங்கினேன். என் ப‌டிப்புபோதாதென்று உண‌ர்ந்து
ஒருவ‌ருட‌த்திற்குப்பின் திரும்பினேன். 6 வ‌ருட‌ங்க‌ள் வேத‌ சாஸ்திர‌ம் ப‌டித்தேன்.
போத‌க‌ப் ப‌ட்ட‌ம் பெற்றேன்.

அத‌ன்பின் இந்தியாவுக்கு என்னை மிஷ‌னெரியாக‌ அனுப்பும்ப‌டி பிர‌ஸ்பித்தேரிய‌ன் மிஷ‌ன் ச‌ங்க‌த்திற்கு நான் ம‌னுச் செய்தேன். ஊழிய‌த்திற்கு நான் த‌குதிய‌ற்ற‌வ‌ன் என்று அவ‌ர்க‌ள் க‌ண்டு, என் ம‌னுவைத் த‌ள்ளிவிட்டார்க‌ள், நானோ சோர்ந்துபோனேன்.

உள்நாட்டில் வேலை செய்ய‌ ஆர‌ம்பித்தேன். டொர‌ணோவில் உள்ள‌ ச‌பையிலும், பின்பு அல‌ய‌ன்ஸ் ச‌பையிலும் போத‌க‌ர‌க‌ ஊழிய‌ஞ் செய்தேன். ஆயினும் என‌க்கு
நிம்ம‌தியில்லை. வெளி நாடுக‌ளுக்குப் போய் உழைக்க‌ வேண்டும் என்ப‌தே என் ஆசை. ஆக‌வே நான் ஐரோப்பாவுக்குப்போய் லேத்வியா, எஸ்த்தோனியா, போல‌ந்து முத‌லிய‌ இட‌ங்க‌ளில் அநேக‌ருக்குப் பிர‌ச‌ங்கித்தேன். ப‌ல‌ ஆத்துமாக்க‌ளைக் கிறிஸ்துவுக்காக‌ ஆதாய‌ம்ப‌ண்ணினேன். ஒருனாள் அதிக‌மாய் நான் பிர‌ச‌ங்க‌ம் செய்த‌ப‌டியால் ம‌ய‌க்க‌முற்றுச் சாகும் நிலைமைக்குள்ளாகித் திரும்ப‌வும் என் சுய‌தேச‌ம் வ‌ந்து
சேர்ந்தேன்.

ஐக்கிய‌ மாகாண‌த்திலும், க‌ன‌டாவிலும் சுவிசேஷ‌க்கூட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்தினேன்.
ம‌றுப‌டியும் வெளிநாட்டுக்குப்போக‌வேண்டுமென‌ ஆசித்து நான் ஸ்பெயின் ஹேச‌ம் போனேன். இத்த‌ட‌வையும் வியாதியால் தாய் நாட்டிற்குத் திரும்புடி நேர்ந்த‌து.

1930 ஆம் வ‌ருட‌த்தில் டொர‌ண்டோவிலுள்ள‌ ம‌க்க‌ள் ஆல‌த்தின் பொறுப்பை நான்
ஏற்றுக்கொண்டேன். இர‌ண்டாண்டுக‌ள் சென்ற‌பின் மீண்டும் சுவிசேஷ‌ வாஞ்சையால் நான் ஆப்ப்பிரிக்கா தேச‌த்திற்குப் போனேன். அத்தேச‌த்தில் டாக்ட‌ர் தாம்ஸ் லேம்பி என்ப‌வ‌ருட‌ன் சேர்ந்து குதிரைமேல் பிர‌யாண‌ஞ் செய்தேன். நான் ஒன்றுக்கு 30 மைல் தூர‌ம் பிர‌யாண‌ஞ் செய்து, ஆப்பிரிக்காவின் புல் வெளிப் பிர‌தேச‌த்தில் சென்ற‌போது, நான் அதிக‌ வியாதியாய் 6 வார‌ங்க‌ள் இருந்த‌பின், திரும்ப‌வும் என் தாய் நாட்டிற்குக் கொண்டு வ‌ர‌ப‌ட்டேன்.

ம‌றுப‌டியும் 1938 இல் ப‌சிபிக் தீவுக‌ளுக்குச் சென்றேன். இப்ப‌ய‌ண‌த்தில்
இராப்ப‌க‌லாய் 31 நாட்க‌ள் க‌ப்ப‌லில் இருந்தேன். சாலொமோன் தீவுக‌ளிலிருந்த‌
கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கும் அநாக‌ரிக‌மான‌ ம‌க்க‌ளுக்கும் பிர‌ச‌ங்கித்தேன். சிறிது
நாள்க‌ளுக்குள் நான் குளிர் ஜுர‌த்தால் பீடிக்க‌ப்ப‌ட்டு 3 வ‌ருட‌ங்க‌ள்
க‌ஷ்ட‌ப்ப‌ட்ட‌தால் மிக்க‌மெலிவ‌ட‌ந்தேன். ம‌ற்ற‌ மிஷ‌னெரிக‌ள் என்னைக் க‌ப்ப‌லில்
ஏற்றி, என் ப‌ழைய‌ வேலைக்கே என்னை அனுப்பி வைத்தார்க‌ள் நான் மிஷ‌னெரி
ஊழிய‌த்திற்காக‌ அய‌ல்நாடுக‌ளுக்கு செல்ல‌ப்ப‌ல‌முறை முய‌ன்றேன். 40 க்கு
மேற்ப‌ட்ட‌ தேச‌ங்க‌ளுக்குப் ப‌ய‌ண‌ஞ்செய்தேன். முடிவில் உஷ்ண‌ப் பிர‌தேச‌ங்க‌ளில் என்னால் வ‌சிக்க‌ முடியாது என்று நான் க‌ண்ட‌றிந்தேன். நான் ப‌திலாள்க‌ளை அனுப்பினேன்.

என் ஊழிய‌ ஆர‌ம்ப‌ நாள்க‌ளில் அய‌ல் நாடுக‌ளுக்கு நான் போக‌ இய‌லாத‌வ‌ன்
என்றுண‌ர்ந்து, ப‌திலாள்க‌ளை அனுப்ப‌ முய‌ன்றேன். ஒருநாள் தென் அமெரிக்க‌ சுவிசேஷ‌ ஐக்கிய‌ ச‌ங்க‌த்தின் த‌லைவ‌ர் J.H.W கூக் என்ப‌வ‌ரை நான் ச‌ந்தித்துச் செய்த‌ ச‌ம்பாஷ‌ணையாவ‌து: 'நீங்க‌ள் அய‌ல் நாடுக‌ளுக்குப் புது ஆள்க‌ளை அனுப்புகிறீர்க‌ளா?" என்று கேட்டேன், "ஆம், ஐந்து பேர் போக‌
ஆய‌த்த‌மாயிருக்கிறார்க‌ள்" என்றார். 'ஏன் அவ‌ர்க‌ளை அனுப்ப‌வில்லை?' என‌க்
கேட்டேன். "எங்க‌ளிட‌ம் ப‌ண‌ம் இல்லை" என‌ப் ப‌தில‌ளித்தார். அவ‌ர்க‌ளைப்
போஷிக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ள‌ என‌க்கு எட‌ம் கொடுப்பீர்க‌ளா? என்று
கேட்டேன். முக‌ம‌ல‌ர்ச்சியுட‌ன் அவ‌ர் "ஆக‌ட்டும்" என்றார்.

நான் அக்காரிய‌த்தை எங்க‌ள் ம‌க்க‌ள் ச‌பையாருக்கு அறிவித்து, அந்த‌
மிஷ‌னெரிமார்க‌ளை அனுப்ப‌க்கூடுமா, கூடாதா என‌ப் பதில் கூறூம்ப‌டி வேண்டினேன். ச‌பையார் அவ‌ர்க‌ளை அனுப்பினார்க‌ள். அந்த‌ 5 பேர், 10, 20, 40, 100, 200 பேராக‌ப் பெருகி முடிவில் 350 பேரானார்க‌ள். த‌ற்ச‌ம‌ய‌ம் எங்க‌ள் ப‌திலாள்க‌ளாக‌ 40 ஊழிய‌ர்க‌ள் அய‌ல் நாடுக‌ளில் ஊழிய‌ஞ் செய்து வ‌ருகிறார்க‌ள். 35 வெவ்வேறு மிஷ‌ன் ச‌ங்கங்க‌ளால் அனுப்ப‌ப்ப‌ட்ட‌ அவ‌ர்க‌ளைப் போஷிக்கும் பொறுப்பு எங்க‌ளுடைய‌து.

ஆனாலும், என‌க்குத் திருப்தி இல்லை. என் ஓயாத‌ ஜெப‌ம் என்ன‌வென்றால், "க‌ர்த்தாவே, உம‌க்குச் சித்த‌மானால் என் ச‌பையின் சார்பாக‌ அய‌ல் நாடுக‌ளுக்கு 400 மிஷ‌னெரிமார் போகும‌ட்டும் நான் உயிரோடிருக்க‌ அருள் செய்யும்" என்ப‌தே. இந்நோக்க‌த்திற்காக‌வே நான் இவ்வுல‌கில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு போத‌க‌ராக‌வும், க‌விஞ்ராக‌வும், நூலாசிரிய‌ராக‌வும் இருப்ப‌து இர‌ண்டாவ‌து காரிய‌ம். ஆனால் நான் ஒரு மிஷ‌னெரியாராயிருப்ப‌தே முத‌ல் விஷ‌ய‌ம். நானே மிஷ‌னெரியாக‌ச் சென்றேன். ஆனால் த‌டுக்க‌ப்ப‌ட்டேன். பின்பு நான் செய்ய‌க்கூடிய‌ காரிய‌ம் ஒன்று உண்டு என‌க் கெண்டேன். ப‌திலாள்க‌ளை அனுப்ப‌ நிர்ண‌ய‌ங் கொண்டேன். அத‌ற்காக‌வே நான் ந‌மெரிக்க‌ ஐக்கிய‌ மாகாண‌ங்க‌ள், க‌ன‌டா, ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, கிரேட் பிரிட்ட‌ன் முத‌லிய‌ தேச‌ங்க‌ள் முழுவ‌தும் பிர‌யாண‌ஞ் செய்கிறேன். மிஷ‌னெரி மாநாடுக‌ள் மூல‌மாய் வாலிப‌ர்க‌ளைச் சுவிசேஷ‌ ஊழிய‌த்திற்குப் போக‌ ஏவி எழுப்புகிறேன். என‌க்குப் ப‌திலாக‌ ஆள்க‌ளைக் க‌ண்டுபிடுத்து அவ‌ர்க‌ளை வெளிநாடுக‌ளுக்கு அனுப்ப‌
என்னாலான‌ம‌ட்டும் முய‌ற்சித்து வ‌ருகிறேன்.

அடுத்த‌ ஊர்க‌ள்

இயேசு கிறிஸ்து ச‌க‌ல‌ ப‌ட்ட‌ண‌ங்க‌ளுக்கும் கிராம‌ங்க‌ளுக்கும் போனார். அவ‌ர் ஒரு ச‌ம‌ய‌ம் ஒரு ப‌ட்ட‌ண‌த்தில் ஊழிய‌ஞ்செய்த‌பின் ம‌றைந்து போனார். சீஷ‌ர்க‌ள்
அதிகாலையில் இருட்டோடே எழுந்து சென்று அவ‌ரைத் தேடினார்க‌ள். க‌டைசியில், அவ‌ர் ஒரு ம‌லையின்மேல் ஜெப‌ம் செய்வ‌தைப் பார்த்து, அவ‌ர்க‌ள், "ஐய‌ரே, உம்மை எல்லாரும் தேடுகிறார்க‌ள்; ஏனெனில் இன்னும் அநேக‌ வியாதிக்கார‌ர் இருக்கிறார்க‌ள். ஆக‌வே நீர் திரும்பிவ‌ந்து உம்முடைய‌ வேலையை முடித்துவிடும். ந்ந்ற்று நீர் வேலை செய்த‌ ப‌ட்ட‌ண‌த்தில் இன்னும் அநேக‌ர் உம்முடைய‌ வார்த்தைக‌ளைக் கேட்க‌ விரும்புகிறார்க‌ள்" என்றார்க‌ள்.

அத‌ற்கு ந‌ம‌து ஆண்ட‌வ‌ர் கூறின‌ ப‌திலாவ‌து: "அடுத்த‌ ஊர்க‌ளிலும் நான்
பிர‌ச‌ங்க‌ம்ப‌ண்ண‌ வேண்டும்; இத‌ற்காக‌வே நான் புற‌ப்ப‌ட்டுவ‌ந்தேன்" என்ப‌தே.
தாம் ஊழிய‌ஞ் செய்ய‌வேண்டிய‌ அடுத்த‌ ஊர்க‌ளைப்ப‌ற்றி நினைத்துக்கொண்டேயிருந்தார். எல்லா இட‌ங்க‌ளிலும் சுவிசேஷ‌த்தை அறிவிக்க‌வேண்டும் என‌ அவ‌ர் ஆசித்தார். அவ‌ர் எப்பொழுதும் "ம‌ற்ற‌ ஆடுக‌ளை"க் குறித்துக் க‌வ‌லையுற்ற‌வ‌ராயிருந்தார்.

ப‌வுல் அப்போஸ்த‌ல‌னுக்கும் இதே வாஞ்சை இருந்த‌து. ந‌ற்செய்தி உல‌க‌ முழுவ‌தும் அறிவிக்க‌ப்ப‌ட‌வேண்டும் என்று உண‌ர்ந்ட்து ஸ்பெயின் தேச‌த்திற்கும்,
ரோமாபுரிக்கும் தான் போக‌ விரும்புவ‌தாக‌ச் சொன்னார்.

ஒரு கால‌த்தில் வ‌ட‌ ஆப்பிரிக்கா முழுவ‌தும் சுவிசேஷ‌ம் அறிவிக்க‌ப்ப்ட்டு
நூற்றுக்க‌ண‌க்கான‌ ச‌பைக‌ள் அங்கு ஸ்தாப‌க‌மாயின‌, முத‌ல் நூற்றாண்டுக‌ளில் பேர் பெற்ற‌ வேத‌ சாஸ்திரிக‌ள் ப‌ல‌ர் அங்கே எழும்பினார்க‌ள். ஆனால் அங்கு
ச‌ம்ப‌வித்த‌து என்ன‌? வ‌ட‌ ஆப்பிரிக்கா முழுவ‌தும் முக‌ம‌து மார்க்க‌மாயிற்று.
ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாக‌ அங்கே கிறிஸ்து மார்க்க‌ம் இல்லாம‌ல் போயிற்று. ம‌ங்கி
ம‌ங்கி எரிந்த‌ விள‌க்கு க‌டையில் அவிழ்ந்து போயிற்று. இத‌ற்குக் கார‌ண‌ம் என்ன‌?

வ‌ட‌ ஆப்பிரிக்காவிலுள்ள‌ மார்க்க‌த் த‌லைவ‌ர்க‌ளும், வேத‌சாஸ்திரிக‌ளும் சுவிசேஷ ஊழிய‌ஞ் செய்யாம‌ல் வேத‌ சாஸ்திர‌ங்க‌ளைப்ப‌ற்றியும், கிறிஸ்தவ‌க் கொள்கைக‌ளைப் பற்றியும் த‌ர்க்க‌மும் வாக்குவாத‌மும் செய்ய‌ ஆர‌ம்பித்தார்க‌ள். அவ‌ர்க‌ள் மேற்கேயுள்ள‌ ம‌ற்ற‌ப்ப‌ட்ட‌ண‌ங்க‌ளுக்கும், அத‌ற்க‌டுத்த‌ ஊர்க‌ளுக்கும்
போயிருக்க‌ வேண்டிய‌து. அப்ப‌டி அவ‌ர்க‌ள் சென்றிருந்தால் கேப் ந‌க‌ர‌ம் வ‌ரைக்கும் போயிருப்பார்க‌ள்.


பல நூற்றாண்டுகளுக்கு முன்னதேயே ஆப்பிரிக்கா முழுவதிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருப்பார்கள். ஆப்பிரிக்கா தேசமே மிஷனெரிமார்களை ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்குங் கூட அனுப்பியிருக்கக்கூடும்.

சகோதரரே, மேற்கூறிய சம்பவம் இங்கேயும் நடக்கலாம். தற்சமயம் நடக்கிறது என்றும் சொல்லலாம். இப்போது அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலும், கனடாவிலும், கிரேட் பிரிட்டனிலும், ஆஸ்திரேலியாவிலும், நியூஜிலாந்திலும், இந்தியாவிலுமுள்ள நூற்றுக்கணக்கான சபைகள் விருந்துண்டு களிக்கின்றவைகளாக மட்டும் இருக்கின்றன.
கிறிஸ்துவின் சபைகள் விழிப்புள்ளவைகளாக, சுவிசேஷத்தை உலக முழுவதிலும் அறிவிக்காவிடில் ஆப்பிரிக்காவுக்கு உண்டான முடிவே இங்கேயும் நேரிடும். தூரத்தில் பிரகாசிக்கிற வெளிச்சம் பக்கத்தில் அதிகப் பிரகாசம் கொடுக்கும் என்பதற்குச் சந்தேகம் இல்லை.

நிலம் உலகம்

நான் செல்லும் இடங்களிலெல்லாம் பின்வரும் கேள்விகளை என்னிடம் கேட்கிறார்கள். "உள்நாட்டில் உள்ள எல்லாரும் இரட்சிக்கப்படுமுன் ஏன் வெளிநாடுகளுக்குப் போகவேண்டும்? தாய்ச்சபையில் செய்யவேண்டிய வேலைகள் ஏராளம் இருக்கின்றனவே; பிறநாடுகளுக்குச் செல்லுமுன் சொந்தச் சபையின் வேலையை ஏன் முடிக்கச் கூடாது? இக்கேள்விகளுக்கு என் பதிலாவது: முதலாவது, ஸ்காட்லாந்திலுள்ள ஒவ்வொருவரும் கிறிஸ்தவராகுமுன் ஏன் டேவிட் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காவுக்குச் சென்றார்? இரண்டாவது இங்கிலாந்துல் எல்லோரும் கிறிஸ்தவர்களாகும் முன் ஏன் வில்லிய‌ம் கேரி ஐய‌ர் இந்தியாவுக்கு வ‌ந்தார்? மூன்றாவ‌து, அமெரிக்காவில் ஒவ்வொருவ‌ரும் கிறிஸ்துவினிட‌ம் வ‌ருமுன் ஏன் ஜ‌ட்ச‌ன் ஐய‌ர் அமெரிக்காவை விட்டுப் ப‌ர்மாவுக்குப் போனார்? க‌டைசியாக‌, ப‌ல‌ஸ்தீனா நாட்டார் முழுவ‌தும் சுவிசேஷ‌த்தைக் கேட்ப‌த‌ற்குமுன் ஏன் ப‌வுல் அப்போஸ்த‌ல‌ன் ஐரோப்பாவுக்குப் போனார்?

என் ந‌ண்ப‌ர்க‌ளே! மேற்கூறிய‌ கேள்விக‌ளுக்கு வேத‌ புத்த‌க‌த்தின் வார்த்தைக‌ளால்
நான் உங்க‌ளுக்குப் ப‌தில் சொல்லுகிறேன். "நில‌ம் உல‌க‌ம்" ஓர் உழ‌வ‌ன் த‌ன்
வ‌ய‌லின் ஒரு மூலையை ம‌ட்டும் உழுது ப‌ண்ப‌டுத்துவானா? இல்லையே. த‌ன் நில‌ம் முழுவ‌தும் உழுது வேலை செய்வான் அல்ல‌வா? அதுபோல‌, ஒரே ஒரு தேச‌த்தில் ம‌ட்டுமல்ல‌, உல‌க‌ம் முழுவ‌திலும் சுவிசேஷ‌த்தை நாம் அறிவிக்க‌ வேண்டும். உள்நாட்டு வேலை முடியும‌ட்டும் நான் தாய் நாட்டில் த‌ரித்திருப்ப‌து க‌ட‌வுளின் சித்த‌ம‌ல்ல‌. உல‌க‌மாகிய‌ முழு நில‌த்திற்கும் நாம் போய் ஏக‌ கால‌த்தில் வேலை செய்ய‌ வேண்டுமென்று இயேசுகிறிஸ்து விரும்புகிறார்.

"அய‌ல் நாடுக‌ளில் சுவிசேஷ‌ப் பிர‌ப‌ல்ய‌ம் செய்வ‌து பிர‌யோஜ‌ம் இல்லை" என்று நீ சொல்வாயானால், ப‌வுல் அப்போஸ்த‌ல‌ன் ஐரோப்பாக் க‌ண்ட‌த்தில் சுவிசேஷ‌த்தைப் பிர‌சித்த‌ஞ்செய்த‌து த‌வ‌றான‌ காரிய‌ம் என்ப‌து உன் க‌ருத்து. நீயும் உன் பிதாக்க‌ளும் இன்னும் அஞ்ஞான‌ இருளிலே இருக்க‌த்த‌க்க‌தாக‌ மிஷ‌னெரிமார்க‌ள் த‌ங்க‌ள் சொந்த‌ தேச‌த்திலேயே த‌ங்கியிருந்த‌தால் ந‌ல்ல‌து என்று நினைக்கிறாயா? உன் தேச‌த்திற்குச் சுவிசேஷ‌ம் வ‌ந்த‌தைப் ப‌ற்றி உன‌க்கு விச‌ன‌மா? சுவிசேஷ‌ வேலையைக் குறித்து உன‌க்கு அக்க‌றை இல்லை என்றால் காரிய‌ம் அப்ப‌டித் தான் என்று தோன்றுகிற‌து.

பின் வ‌ரிசைக‌ள்

இயேசு இர‌ட்ச‌க‌ர் 5000 பேரைப் போஷித்த‌ விஷ‌ய‌ம் உங்க‌ளுகு ஞாப‌க‌ம்
இருக்கிற‌த‌ல்ல‌வா? அவ‌ர்க‌ளைப் பில் த‌ரையில் வ‌ரிசை வ‌ரிசையாக‌ உட்கார‌வைத்த‌தை நினைவு கூருங்க‌ள். பின்பு அவ‌ர் அப்ப‌ங்க‌ளையும், மீன்க‌ளையும் எடுத்து ஆசீர்வ‌தித்து, பிட்டுத் த‌ம‌து சீஷ‌ரிட‌ம் கொடுத்தார் அல்ல‌வா? சீஷ‌ர்க‌ள் முத‌ல் வ‌ரிசை தொட‌ங்கிக் கிர‌ம‌மாய் ஒவ்வொருவ‌ருக்கும் ப‌ரிமாறினார்க‌ள் அல்ல‌வா? பின்வ‌ரிசையிலுள்ள‌வ‌ர்க‌ளுக்கு முத‌ல் த‌ட‌வை குட‌ப் ப‌ரிமாறாம‌ல் அவ‌ர்க‌ள் திரும்ப‌வும் முத‌ல் வ‌ரிசையிலுள்ள‌வ‌ர்க‌ளுக்கு இர‌ண்டாவ‌து முறையாக‌க் கொடுத்தார்க‌ளா? அப்ப‌டிய‌ல்ல‌. அவ‌ர்க‌ள் அவ்வாறு செய்திருப்பார்க‌ளானால் பின் வ‌ரிசையிலுள்ள‌வ‌ர் எழுந்து நின்று "என்ன‌ ஐயா, இது த‌ரும‌மா? நாங்க‌ள் ஒரு த‌ட‌வைக்கூட‌ பெற்றுக்கொள்ள‌வில்லை; எங்க‌ளுக்குப் ப‌சி ப‌ய‌ங்க‌ர‌மாயிருக்கிற‌து. திரும்ப‌ முத‌ல் வ‌ரிசையிலுள்ள‌வ‌ர்க‌ளுக்குக் கொடுப்ப‌து நியாய‌ம‌ல்ல‌" என‌க் கூச்ச‌லிட்டிருப்பார்க‌ள் அல்ல‌வா?

அவ‌ர்கள் அப்ப‌டி முறையிடுவ‌து ச‌ரியே. சில‌ர் இர‌ண்டாவ‌து ஆசீர்வாத‌த்தைப்
ப‌ற்றிப் பேசுவார்க‌ள். அநேக‌ருக்கு முத‌ல் ஆசீர்வாத‌மே கிடைக்க‌வில்லை. நாம்
கிறிஸ்துவின் இர‌ண்டாம் வ‌ருகையைப்ப‌ற்றிப் பேசுகிறோம். அநேக‌ருக்கு அவ‌ர‌து முத‌ல் வ‌ருகையைப்ப‌ற்றியே தெரியாது. இது நியாய‌மா? ஒவ்வொருவ‌ரும் சுவிசேஷ‌த்தை ஒருமுறை கேட்ப‌த‌று முன் ஏன் சில‌ர் இருமுறை கேட்க‌வேண்டும்? நீங்க‌ள் அறிந்திருக்கிற‌ப‌டி எல்லாரும் ஒருமுறை சாப்பிடுவ‌த‌ற்குமுன் அந்த‌ 5000 ஆண்டுக‌ளில் ஒருவ‌னாவ‌து இருமுறை சாப்பிட்டிருக்க‌ மாட்டான்.

பின்வ‌ரிசையிலுள்ள‌வ‌ர்க‌ளால் எந்த‌ப் போத‌க‌ரும் ச‌ங்க‌ட‌ப்ப‌ட்ட‌தாக‌ நான்
அறிய‌வில்லை. அவ‌ருக்கு வ‌ரும் உப‌த்திர‌வ‌ங்க‌ள் எல்லாம் முத‌ல் வ‌ரிசையிலுள்ள‌வ‌ர்க‌ளால்தான். அள‌வுக்கு மிஞ்சிப்புசித்த‌தினால், அவ‌ர்க‌ளுக்கு ஆவிக்குரிய‌ அஜீர‌ண‌ம் ஏற்ப‌டுகிற‌து. அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் போத‌க‌ரிட‌ம்
த‌ங்க‌ளுக்கு எவ்வ‌ள‌வு ஆகார‌ம் வேண்டும், எப்போது அதைக் கொடுக்க‌ வேண்டும், எப்போது நிறுத்த‌வேண்டும், எவ்வ‌ள‌வு நேர‌ம் கொடுக்க‌வேண்டும், எப்ப‌டிப் ப‌ட்ட‌ ஆகார‌ம் கொடுக்க‌வேண்டும் என்றெல்லாம் க‌ட்ட‌ளையிடுகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் விதித்த்ப‌டி செய்யாம‌ற்போனால் உட‌னே குற்ர‌ம் க‌ண்டுபிடிக்க‌வும், பிராதுப‌ண்ண‌வும் ஆர‌ம்பிக்கின்ற‌ன‌ர். விவேக‌முள்ள‌ போத‌க‌ரானால், சிறிது கால‌ம் முத‌ல் வ‌ரிசையை விட்டு விட்டுப் பின் வ‌ரிசைக்குப் போவார். அப்பொழுதுதான் முத‌ல் வ‌ரிசைக்கார‌ர் ப‌சிதாக‌ம் அடைவார்க‌ள். போத‌க‌ர் திரும்பி வ‌ரும்போது அவ‌ரைச் ச‌ந்தோஷ‌த்துட‌ன் ஏற்றுக்கொள்வார்க‌ள். அவ‌ரைப் ப‌ற்றிய‌ முறுமுறுப்பும், பிராதும் நின்றுவிடும்.
அன்ப‌ர்க‌ளே, பின் வ‌ரிசையிலுள்ள‌வ‌ர்க‌ள் இருக்கும் தேச‌ங்க‌ளுக்கு நான்
போன‌துண்டு. அங்கு இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ள் ஜீவாகார‌மின்றிப் ப‌ட்டினியாயிருப்ப‌தை நான் பார்த்தேன். இது ச‌ரியா? முத‌ல் வ‌ரிசையை க‌வ‌னித்துக்கொண்டிருப்ப‌து நியாய‌மா? முத‌ல் வ‌ரிசையில் உள்ள‌வ‌ர்க‌ளுக்குக் கொடுக்க‌த்த‌க்க‌தாக‌, நாம் அவ‌ர்க‌ளை அப்பியாச‌ப்ப‌டுத்தி இவ்வித‌மாய்ச் சுவிசேஷ‌ம் பின்ன‌ணியிலிருப்போருக்கும் கிடைக்க‌ முய‌ற்சிக்க‌ வேண்டாமா? அவ‌ர்க‌ள் திர‌ளாக‌ச் சுவிசேஷ‌மில்லாம‌ல் அந்த‌கார‌த்திலும், ப‌ர‌ண‌ இருளிலும் இருக்கிற‌தைக் க‌வ‌னிப்போமாக‌.

ப‌ண்டித‌ர் ட‌ப் வேண்டுகோள்

இந்தியாவில் அதிக‌க் கால‌ம் மிஷ‌னெரி ஊழிய‌ஞ்செய்து த‌ள்ளாடின‌ வ‌ய‌தில்
ஸ்காட்லாந்து திரும்பின டாக்ட‌ர் ட‌ப் என்ப‌வ‌ர், ஒரு பிர‌ஸ்பித்தேரிய‌ன் ச‌பை
பொதுக்கூட்ட‌த்தில் நின்று, "மிஷ‌னெரி ஊழிய‌ம் செய்ய‌ இந்தியாவுக்குப் போகிற‌து யார்?" என‌ ஒரு வேண்டுத‌ல் விடுத்தார். ப‌திலைக் காணோம். அவ‌ர் பேசின‌போதே ம‌ய‌க்க‌முற்ற‌தால், மேடையினின்று தூக்கிக்கொண்டு போக‌ப்ப‌ட்டார். வைத்திய‌ர் வ‌ந்து அவ‌ரைப் ப‌ரிசோதித்தார். அப்போது ப‌ண்டித‌ர் ட‌ப், த‌ன் க‌ண்க‌ளைத் திற‌ந்து, "நான் எங்கேயிருக்கிறேன், நான் எங்கேயிருக்கிறேன், நான் எங்கேயிருக்கிறே?" என‌க்கேட்டார்.

"பேசாம‌ல் ப‌டுத்திருங்க‌ள், உங்க‌ள் உட‌ல் மிக‌வும் பெல‌வீன‌மாயிருக்கிற‌து' என்று
வைத்திய‌ர் சொன்னார். அவ‌ரோ, "நான் என் வேண்டுகோளைச் சொல்லிமுடிக்க‌வேண்டும்; என்னைத் திரும்ப‌வும் மேடைக்குக் கொண்டு போங்க‌ள்; நான் இன்னும் என் வேண்டுத‌லை முடிக்க‌ வில்லையே" என‌த்தாப‌ந்த‌மாக‌ வ‌ற்புறுத்தினார். "அமைதியாய் ப‌டுத்திருங்க‌ள், மீண்டும் அங்கு போய்ப் பேச‌ உங்க‌ளுக்குப் பெல‌னில்லை" என்றார் வைத்திய‌ர்.

என்றாலும் வ‌ய‌துசென்ற‌ அம்மிஷ‌னெரி எழுந்துநின்று, வைத்திய‌ர் ஒரு ப‌க்க‌த்திலும், ம‌று ப‌க்க‌த்தில் அச்ச‌ங்க‌த்த‌லைவ‌ரும் தாங்க‌ மேடை மீது ஏறினார். அவ‌ருக்கு மரியாதை காட்டும்ப‌டியாக‌ ச‌பையார் எல்லாரும் எழுந்து நின்றார்க‌ள். அவ‌ர் த‌ன் வேண்டுகோளைத் தொட‌ர்ந்து சொன்னார்.

"இராஜ சேவைக்கென‌ இந்தியாவுக்குப் போக‌க்கூடிய‌வ‌ர்க‌ள் யார்? என்று விக்டோரியா ராணி கேட்ட‌போது, நூற்றுக்க‌ண‌க்கான‌ வாலிப‌ர்க‌ள் 'நான் போகிறேன்' என்க்கூறி முன் வ‌ந்த‌ன‌ர். ஆனால் இயேசு இராஜா அழைக்கிறார்; ஒருவ‌ரும் ப‌தில‌ளிக்கிற‌தில்லை" என்று ச‌த்த‌மிட்டுக் கூறினார். பின்பு ப‌ல‌ வினாடி ஓய்வுக்குப்பின் "இந்தியாவிற்கு அனுப்ப‌ ஸ்காட்லாந்து தேச‌த்தில் இன்னும் ஆண் ம‌க்க‌ள் இல்லையா? இது உண்மைதானா?" என‌க் கூறிய‌ ட‌ப் ப‌ண்டித‌ர் திரும்ப‌வும் "ந‌ல்ல‌து, இந்தியாவுக்கு அனுப்ப‌ ஸ்காட்லாந்தில் ஒரு வாலிப‌னும் இல்லை என்றால், நான் வ‌யோதிப‌னாயும், பெல‌வீன‌னாயும்
இருந்தாலும், திரும்ப‌ப் போவேன். நான் பிர‌ச‌ங்க‌ம் செய்ய‌ இய‌லாத‌வ‌னானாலும்
க‌ங்கை ந‌தியின் க‌ரையில் ப‌டுத்திருந்து சாவேன். அப்ப‌டிச் செய்வ‌தினால் த‌ங்க‌ள்
ஆத்துமாக்க‌ளுக்காக‌க் க‌வ‌லைப்ப‌ட்டுத் த‌ன் ஜீவ‌னையும் கொடுக்க‌ ஸ்காட்லாந்தில் ஒரு ம‌னித‌னாவ‌து இருக்கிறான் என்ப‌தை இந்திய‌ ம‌க்க‌ள் அறிந்து கொள்ள‌ட்டும்" என்று சொல்லித் த‌ம் பேச்சை நிறுத்தினார்.

அவ‌ர் இவ்வாறு கூறின‌வுட‌ன் ஒரு நொடிக்குள் கூட்ட‌த்திலுள்ள‌ வாலிப‌ர் தீவிர‌மாய் எழுந்து நின்று, "நான் போவேன்! நான் போவேன்!! நான் போவேன்!!" என‌ச் ச‌த்த‌மிட்டுக் கூறினார்க‌ள். அந்த‌க் கீர்த்திபெற்ற‌ மிஷ‌னெரி ம‌ரித்த‌ப்பின் க‌ட‌வுள் அவ‌ர்மூல‌யாய் கொடுத்த‌ வேண்டுகோளுக்குக் கீழ்ப்ப‌டிந்து, அநேக‌ வாலிப‌ர்க‌ள் இந்தியாவிற்கு வ‌ந்து, த‌ங்க‌ள் வாழ்நாள்க‌ளை சுவிசேஷ‌ ஊழிய‌த்திற்காக‌ அர்ப்ப‌ண‌ம் செய்த‌ன‌ர்.

என் சிநேகித‌னே, நீ அப்ப‌டிச் சொல்வாயா? க‌ட‌வுள் உன்னை அழைத்திருக்கிறாரா? அழைக்க‌வில்லையா? நீ அவ‌ருடைய‌ அழைப்பைக் கேட்டுக் "க‌ர்த்தாவே, இதோ அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும்" என்று நீ ப‌தில் சொல்ல‌மாட்டாயா? தீர்மான‌ம் செய்ய‌வேண்டிய‌து நீயே. எல்லாரும் சுவிசேஷ‌த்தை ஒரு முறை கேட்குமுன் ஏன் ஒருவ‌ன் (நீ) இருமுறை கேட்க‌வேண்டும்?

No comments: