Thursday, February 4, 2010

கிறிஸ்தவ கதைகள்

இரட்டை குழந்தை

இரட்டை குழந்தையில் ஒருவனுக்கு சிலம்பன் என்றும் மற்றொருவனுக்கு சமாதனம்
என்றும் பெயர் வைத்து மகிழ்ந்தார் சுப்பன்.
வளர்ந்து வரும் நாட்களில் இரண்டு பேரின் குணநலன்களும் எதிர் விதமாக
அமைந்தது. சிலம்பன் காலையில் எழும்பினதும் தன்னுடைய உடலை பேணுவதிலும்
உடற்பயிற்சி செய்வதிலும் அதற்குரிய புத்தகங்கள் வாசிப்பதும் சுவர்களில்
வித்தியாசமான படங்களை ஒட்டி அதை ரசிப்பதும்.. இப்படி இன்னும் அநேகம் செய்து
மற்றவர்களை வசீகரப்படுத்துவதே இவனின் மேலான எண்ணம்.
சமாதானமோ, முற்றிலும் வித்தியாசமாக வளர்ந்தான். காலையில் எழும்பினதும்
தேவனோடு உறவாடி ஆவிக்குரிய காரியங்களில் மாத்திரம் கவனம் செலுத்தி வேத
வசனங்களை சுவர்களில் ஒட்டி தியானம் செய்து தன்னுடைய ஆத்துமாவை
பெலப்படுத்தினான்.
தகப்பனார் இருவருக்கும் என்னது தேவையோ அதை கொடுத்து பூர்த்தி செய்தார்.
சிலம்பனை பார்த்து எப்பொழுதும் பெருமைப் படுவார் புலிக்கு பிறந்தது
பூனையாகுமோ! என்பார். நாடக் ள் செனற் து. பிள்ளைகளின் குணாதிசயங்களில்
மாறற் ம் ஏற்படட் து. சிலம்பனின் உள்ளான மாமிசக் குணங்கள் கொஞ்ச கொஞ்சமாக
வெளிக்காட்ட ஆரம்பித்தது. தொடக்கத்தில் இலேசாகவே எடுத்தார் தகப்பனார்.
ஆனால் அது மிகுதியாகி கல்லூரியிலிருந்து சிறைச்சாலைக்கும் நியாயசாலைக்கும்
மாற்றப்பட்டது அவனுடைய வாழ்க்கை. வேதனைகள் முட்களாய் குத்த ஆரம்பித்தது.
குடும்பத்தின் பெயர் வீதிகளில் பறக்க ஆரம்பித்தது. சோலைவனம் பாலைவனமாகவும்
களிப்புகள் அழுகையாகவும் மாற்றப்பட்டது.
இந்த சூழ்நிலையில் சமாதானத்தை பார்க்கிறார். அவன் மிகுந்த சமாதானத்துடன்
தன் தகப்பனாருக்கு ஆறுதல் சொல்லி தேவ வசனத்தை எடுத்து காண்பித்தான்.
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று
விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்@ ஆவிக்கென்று விதைக்கிறவன்
ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். கலா 6: 7-8
எனககு; அருமையானவர்களே! இரட்டையர்களாகிய அந்த இருவரைப்போல நம்
ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் மாமிசத்திற்குரிய காரியங்களும் ஆவிக்குரிய
காரியங்களும் காணப்படும். நாம் எதற்கு தீனி போடுகிறோமோ, அது வளர்ந்து ஒரு
நாள் கனி கொடுக்கும்.
நீங்கள் யாருக்கு தீனி போடுகிறீர்கள்?
வெளி மனுஷன் பெலத்தைவிட உள்ளான மனுஷன் பெலன் மிக முக்கியம ; என்பதை
மறந்து விடாதீர்கள்.
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!. ஆமென்

No comments: