Wednesday, September 1, 2010

ஆத்தும வாஞ்சை - ஆஸ்வால்ட் ஜே. ஸ்மித்

7. அந்நிய‌நாட்டு மிஷ‌னெரி ஊழிய‌த்திற்காக‌ நாம் ஏன் ப‌ண‌ச் ச‌காய‌ம் செய்ய‌வேண்டும்?

"வாரியிறைத்தும் விருத்திய‌டைவாரும் உண்டு; அதிக‌மாய்ப் பிசினித்த‌ன‌ம் ப‌ண்ணியும் வ‌றுமைய‌டைவாரும் உண்டு. உதார‌ குண‌முள்ள‌ ஆத்துமா செழிக்கும்: எவ‌ன் த‌ண்ணீர் பாய்ச்சுகிறானோ அவ‌னுக்குத் த‌ண்ணீர் பாய்ச்ச‌ப்ப‌டும்" (நீதி 11: 25, 26). இவ்வேத‌ வ‌ச‌ன‌ங்க‌ள் உண்மையுள்ள‌வைக‌ளே. த‌ங்க‌ள் தால‌ந்தை உப‌யோகித்த‌ ம‌க்க‌ள் இரும‌ட‌ங்கு திரும்ப‌ப் பெற்றார்க‌ள். ஆனால் அதைப் புதைத்து வைத்த‌வ‌னோ உள்ள‌தையும் இழ‌ந்து போனான் அல்ல‌வா?

"உள்நாட்டு வேலைக‌ள் அதிக‌ம் இருக்க‌, ஏன் அய‌ல் நாட்டுக்குப் ப‌ண‌ம் அனுப்ப‌வேண்டும்" என‌க் கேட்கிற‌வ‌ர்க‌ள் உண்டு. இக்கேள்விக்குப் ப‌தில்க‌ளை ஒவ்வொன்றாக‌க் கூறுகிறேன். ஜெப‌ சிந்தையுட‌ன் அவைக‌ளை யோசித்துப் பாருங்க‌ள்.

அய‌ல்நாட்டு ஊழிய‌ஞ் செய்யும் ச‌பைக‌ள் விருத்திய‌டைகின்ற‌ன‌:

தூர‌த்தில் பிர‌காசிக்கிற‌ விள‌க்கு. ப‌க்க‌த்தில் அதிக‌ம் பிர‌காசிக்கும். அய‌ல் நாட்டாரின் இர‌ட்சிப்புக்காக‌ க‌வ‌லைப்ப‌டுவோர் உள் நாட்டாருக்காக‌வும் அக்க‌றை எடுப்பார்க‌ள். நான் ப‌ல‌ஸ்தீனாவிலிருந்த‌போது ப‌ல‌ இட‌ங்க‌ள் சென்றேன். ச‌வ‌க்க‌ட‌லிலும், க‌லியேயாக் க‌ட‌லிலும் நீந்தி ஸ்நான‌ம் செய்தேன். இரு க‌ட‌ல்க‌ளுக்கும் உள்ள‌ வித்தியாச‌த்தைக் க‌ண்டேன். ச‌வ‌க்க‌ட‌ல் ஒரு துளி நீரையும் வெளிவிடாம‌ல் எப்போதும் வாங்கிக் கொண்டேயிருக்கிற‌ப‌டியால் அத‌ன் த‌ண்ணீர் க‌ட்டுக் க‌டையாய்க் கிட‌க்கிற‌து. அதில் ஜீவ‌ராசிக‌ள் ஒன்றுமே இல்லை. க‌லிலேயாக் க‌ட‌லோ, த‌ண்ணீரைப் பெற்றும் கொடுத்தும் கொண்டேயிருக்கிற‌து. இத‌ன் த‌ண்ணீர் தெளிவாக‌வும் சுத்த‌மாக‌வும் இருந்த‌து. மேலும் அநேக‌ ஜீவ‌ ஜ‌ந்துக்க‌ள் அதில் வ‌சிக்கின்ற‌ன‌.

அய‌ல் நாடுக‌ளில் ஊழிய‌ஞ் செய்யும் ச‌பைக்கும், அவ்வூழிய‌த்தில் சிர‌த்தை எடுக்காத‌ ச‌பைக்குமுள்ள‌ வித்தியாச‌த்தைக் காட்டும் ச‌ரியான‌ திருஷ்டாந்த‌ம் இதுவே. பிந்தின் ச‌பை வ‌ருமான‌ங்க‌ளையெல்லாம் த‌ன‌க்காக‌வே உப‌யோகிக்கிற‌து. ஒருபொழுதும் அது வெளியே கொடுக்கிற‌தில்லை. ஆக‌வே ச‌பைக்குள்ளே ப‌ல‌வ‌கை அசுத்த‌ங்க‌ளாகிய‌ குறை கூறுத‌ல், வீண் பேச்சு, குற்ற‌ம் பிடித்த‌ல், பிரிவினைக‌ள், ச‌ண்டைக‌ள் முத‌லான‌வைக‌ள் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌. மிஷ‌னெரி ச‌பையோ வாங்க‌வும் கொடுக்க‌வும் செய்கிற‌து. ஆக‌வே அது உயிருள்ள‌தாயும், ஆசீர்வாத‌ம் நிறைந்த‌தாயுமிருக்கிற‌து. த‌னித்த‌ ஆள் விஷ‌ய‌த்திலும் இந்த‌த் திருஷ்டாந்த‌ம் உண்மையாயிருக்கிற‌து. த‌ன‌க்கென்றே எல்லாவ‌ற்றையும் வைத்துக்கொண்டு, பிற‌ருக்குக் கொடுக்க‌ ம‌றுக்கிற‌வ‌ன் க‌ட்டுக்க‌டைத் த‌ண்ணீராகிய‌ ச‌வ‌க்க‌ட‌லைப் போலிருக்கிறான். அவ‌னால் ஒருவ‌ருக்கும் ஆசீர்வாத‌மில்லை. அந்நிய‌ நாட்டு மிஷ‌னெரி ஊழிய‌த்திற்காக‌ மூல‌த‌ன‌ம் வைக்கிற‌வ‌ன் ப‌ரிபூர‌ண‌ ஜீவ‌னையுடைய‌வ‌னாகியிருக்கிறான். உன் ஜீவிய‌ம் எக்க‌ட‌லைப் போலிருக்கிற‌து? சோதித்த‌றிவோமாக‌.

நீங்க‌ள் பொக்கிஷ‌த்தை எங்கே சேர்த்து வைக்கிறீர்க‌ள்?

நீங்க‌ள் ப‌ர‌லோக‌த்திலாவ‌து, பூலோக‌த்திலாவ‌து பொக்கிஷ‌த்தைச் சேர்த்து வைக்கிறீர்க‌ள். "பூமியிலே உங்க‌ளுக்குப் பொக்கிஷ‌த்தைச் சேர்த்து வைக்க‌வேண்டாம்; இங்கே பூசியும் துருவும் அவைக‌ளைக் கெடுக்கும்; இங்கே திருட‌ரும் க‌ன்ன‌மிட்டுத் திருடுவார்க‌ள். ப‌ர‌லோக‌த்திலே உங்க‌ளுக்குப் பொக்கிஷ‌ங்க‌ளைச் சேர்த்து வையுங்க‌ள்; அங்கே பூச்சியாவ‌து துருவாவ‌து கெடுக்கிற‌தும் இல்லை; அங்கே திருட‌ர் க‌ன்ன‌மிட்டுத் திருடுகிற‌தும் இல்லை" (ம‌த் 6: 9, 20) என்று க‌ட‌வுள் உரைக்கிறார். உங்க‌ளுக்குள்ள‌வைக‌ள் யாவையும் நீங்க‌ள் இழ‌க்க‌வேண்டி வ‌ரும். ஆத்தும‌ ஆதாய‌த்தில் நீங்க‌ள் செல‌விட்ட‌ ப‌ண‌மெல்லாம் நீங்க‌ள் சேமித்து வைத்த‌ ப‌ண‌மாகும். ஒன்று நீங்க‌ள் த‌ரித்திர‌ராக‌, அல்ல‌து சேமிப்பைப் பெரும் சுத‌ந்த‌ர‌ராக‌ப் ப‌ர‌லோக‌த்தில் போய்ச் சேருவீர்க‌ள்.

ந‌ம்மில் சில‌ர் வ‌ய‌து சென்ற‌வ‌ர்க‌ளாயிருக்கிறோம். நாம் ப‌ர‌லோக‌த்தில் பொக்கிஷ‌த்தைச் சேர்ப்ப‌த‌ற்கு இன்னும் கொஞ்ச‌ கால‌மே உண்டு. நாம் இப்போதே தொட‌ங்க‌ வேண்டும். இல்லையேல் கால‌ம் க‌ட‌ந்துவிடும். முன்பு நாம் அனுப்பின‌வைக‌ள் யாவும் சேமிப்பாக‌ வைக்க‌ப்ப‌ட்டிருக்கும். ம‌றுமையில் நாம் அவைக‌ளைவ‌ட்டியுட‌ன் பெற்றுக்கொள்வோம்.

நீங்க‌ள் உங்க‌ள் அன்பை நிரூபித்துக் காட்ட‌வேண்டும்.

நீங்க‌ள் இயேசுநாத‌ரில் அன்பு கூருகிற‌வ‌ர்க‌ளானால், அதை உங்க‌ள் செய்கையால் காட்ட‌வேண்டும். தியாக‌மே அன்பு. அன்பு கிரியையில் வெளிப்ப‌டும். நான் ஆண்ட‌வ‌ரை நேசிக்கிறேன் என‌ச் சொல்வ‌து போதாது. நீங்க‌ள் சேர்த்து வைக்கும் பொக்கிஷ‌த்தினால், ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்காக‌ நீங்க‌ள் செய்யும் தியாக‌த்தினால், புற‌ம‌தஸ்த‌ருக்குச் சுவிசேஷ‌த்தை அறிவிக்க‌ நீங்க‌ள் எடுக்கும் முய‌ற்சியினால் அதை ரூபித்துக் காட்ட‌வேண்டும். கிரியை இல்லாத‌ விசுவாச‌ம் செத்த‌துபோல‌ கிரியை இல்லாத‌ அன்பும் செத்த‌து. நீங்க‌ள் ஆண்ட‌வ‌ரில் அன்புகூருகிறீர்க‌ளானால், அவ‌ரை அறியாத‌வ‌ர்க‌ளும் அவ‌ர‌ண்டை வ‌ர‌த்த‌க்க‌தாக‌ நீங்க‌ள் பெற்றிருக்கும் ந‌ன்மைக‌ளைப் ப‌கிர்ந்து கொடுக்க‌வேண்டும்.

செழிப்புக்கு க‌ட‌வுளின் இர‌க‌சிய‌ம்

ப‌ண்டித‌ர் ப‌வுல் ரீஸ் என்ப‌வ‌ர் போத‌க‌ராயிருந்த‌ மின்னியாபோலிஸ் ப‌ட்ட‌ண‌‌த்திலுள்ள‌ ஆல‌ய‌த்தில் நான் ஆவிக்குரிய‌ கூட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்திக் கொண்டிருந்தேன். ஒரு நாள் ஆராத‌னை முடிந்த‌வுட‌ன் ந‌ன்றாய் உடுத்தியிருந்த‌ ஒரு வியாபாரி பிர‌ச‌ங்க‌ பீட‌த்த‌ண்டை வ‌ந்து என்னுட‌ன் கை குலுக்கினார். அவ‌ர் யாரென‌ என‌க்குத் தெரியாது. அவ‌ர் என்னை நோக்கி "சிமித் ப‌ண்டித‌ரே, என‌க்குரிய‌தெல்லாம் உங்க‌ள் மூல‌யாய்த்தான் கிடைத்த‌து," என்றார். விய‌ப்புட‌ன் அவ‌ரை நான் பார்த்தேன். அப்போது அவ‌ர் த‌ன்னுடைய‌ ச‌ரிதையை என‌க்குச் சொன்னார். அது வ‌ருமாறு: "நான் த‌ரித்திர‌னாயிருந்தேன், என் வேலையை இழ‌ந்தேன்; என் ம‌னைவியும் இர‌ண்டு பெண் குழ்ந்தைக‌ளோடு என்னை விட்டுப் பிரிந்து விட்டாள். க‌ந்தையைக் க‌ட்டியிருந்தேன். நீங்க‌ள் உங்கள் ஆல‌ய‌த்தில் மிஷ‌னெரிக்கூட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்துகையில் ஒருநாள் நான் அங்குவ‌ந்தேன். நீங்க‌ள் பேசிக்கொண்டிருக்கையில், நான் என் வாழ்க்கையில் கேள்விப்ப‌டாத‌ ஒரு ச‌த்திய‌த்தைச் சொன்னீர்க‌ள். அதாவ‌து ஈகையில் நீங்க‌ள் க‌ட‌வுளுக்கு முந்திக்கொள்ள‌ முடியாது, கொடுங்க‌ள், அப்பொழுது உங்க‌ளுக்குக் கொடுக்க‌ப்ப‌டும் நீங்க‌ள் க‌ட‌வுளிட‌ம் நேர்மையாய் ந‌ட‌ந்துக் கொண்டால் அவ‌ர் உங்க‌ளிட‌ம் நேர்மையாய் ந‌ட‌ந்துகொள்வார் என்ப‌தே நான் நிமிர்ந்து க‌வ‌னித்துக் கொண்டிருந்தேன். உங்க‌ள் வார்த்தையின் உண்மையைப் ப‌ரிசோதித்த‌றியும்ப‌டி நீங்க‌ள் கொடுத்த‌ அட்டையில் நூற்றுக்கு இத்த‌னை வீத‌ம் நான் கொடுப்பேன் என்று எழ்ஹுதினேன் என் கையில் ப‌ண‌ம் இல்லாத‌தால் அப‌டி எழுதுவ‌து இலேசு. அதிச‌ய‌த்த‌‌க்க‌ வித‌மாய் சில‌ நேர‌த்திற்குள் என‌க்கு ஒரு வேலை கிடைத்த‌து. முத‌ல் ச‌ம்ப‌ள‌ம் கிடைத்த‌வுட‌ன் நான் வாக்குப்ப‌ண்ணின‌ தொகையை அனுப்பி வைத்தேன். விரைவில் என் ச‌ம்ப‌ள‌ம் உய‌ர்ந்த‌து. நான் என் ச‌ந்தாவையும் கூட்டிக் கொடுத்தேன். பின்பு புதுக்கால்ச‌ட்டையும், மேல் ச‌ட்டையும் வாங்கினேன். அப்புற‌ம் ஒரு ந‌ல்ல‌ வேலையும் என‌க்குக் கிடைத்த‌து உட‌னே என் ம‌னைவி ம‌க்க‌ளும் என்னிட‌ம் திரும்பி வ‌ந்தார்க‌ள். நான் கொடுத்துக்கொண்டேயிருந்தேன். சீக்கிர‌ம் என் க‌ட‌ன்க‌‌ளெல்லாம் தீர்ந்தது. இப்போதோ இங்கே என‌க்குச் சொந்த‌ வீடும் இருக்கிற‌து; சேமிப்பு நிதியிலும் ப‌ண‌ம் இருக்கிற‌து. இவை எல்லாவ‌ற்றிலும் நான் உங்க‌ளுக்குக் க‌ட‌ன் ப‌ட்ட‌வனே; நீங்க‌ள் சொன்ன‌து உண்மையென‌ நான் க‌ண்டேன். க‌ட‌வுள் தாம் சொன்ன‌ப‌டியே செய்கிற‌வ‌ர் என்ப‌தையும், நான் என் அனுப‌வ‌த்தில் க‌ண்டுகொண்டேன்" என‌ ம‌கிழ்ச்சியுட‌ன் கூறினார்.

என் ந‌ண்ப‌னே, செழிப்புக்குக் கார‌ண‌மாயிருக்கும் க்ட‌வுளின் இர‌க‌சிய‌த்தை நீயும் அறிய‌ விரும்புகிறாயா? க‌ட‌வுள் ஒருவ‌னுக்கும் க‌ட‌னாளியாயிருக்க‌மாட்டார். என் ஆல‌ய‌ அலுவ‌ல‌க‌த்திற்கு அநேக‌ர் உத‌வி தேடி வ‌ந்த‌துண்டு. ப‌ல‌முறை அவ‌ர்க‌ளிட‌ம் நான் கேள்வி கேட்ட‌தும் உண்டு. த‌ங்க‌ள் வாழ்நாள்க‌ளில் க‌ட‌வுளுக்கு நேர்மையாய் ந‌ட‌ந்து கொண்டோம் என‌ ஒருவ‌ரும் கூற‌முடியாத‌வ‌ர்க‌ளாய்க் காண‌ப்ப‌ட்டார்க‌ள். த‌ம்மை நினைக்கிற‌வ‌ர்க‌ளைக் க‌ட‌வுளும் ம‌ற‌வார், "என்னைக் க‌ன‌ம் ப‌ண்ணுகிற‌வ‌ர்க‌ளை நானும் க‌ன‌ம் ப‌ண்ணுவேன்" என்று சொல்லியிருக்கிறார். உங்க‌ள் ஜீவிய‌ நாள்க‌ளில் க‌ட‌வுளிட‌ம் நேர்மையாய் ந‌ட‌ந்து கொள்ளுங்க‌ள். இல்லாவிடில் நீங்க‌ளும் அப்ப‌த்துக்காக‌ இர‌ந்து கெஞ்ச‌வேண்டி வ‌ரும். அந்நிய‌ நாட்டு மிஷ‌ன் ஊழிய‌த்திற்காக‌ ஒழுங்காய்க் கொடுப்ப‌தே க‌ட‌வுளுக்குக் கொடுக்கும் சிற‌ந்த‌ முறை என‌ நான் அற்ந்திருக்கிறேன். இதைவிட‌ மேலான‌ முறை வேறொன்றுமில்லை.

ப‌ண‌த்தை உப‌யோகிக்க‌வேண்டும்

ப‌ண‌ம் தன்னில்தான் பிர‌யோஜ‌ன‌ம்‌ உள்ள‌தா? அல்ல‌து அதை உப‌யோகிக்கிற‌தே பிர‌யோஜ‌ன‌மா? கிறிஸ்தவ‌ர்க‌ள் ப‌ண‌த்தைத் தேடிக் குவித்து வைக்காம‌ல் அதைக் க‌ட‌வுளின் இராஜ்ய‌ அபிவிருத்திக்காக‌வே செல‌வு செய்த‌ல்வேண்டும். நான் ஒரு தொழில் செய்கிற‌வ‌னாயிருந்து திர‌ளாய்ப் ப‌ண‌ம் ச‌ம்பாதித்தால், என‌க்கும் என் குடும்ப‌த்திற்கும் போக‌ மீதியைக் கொண்டு சீனாவுக்கு ஒரு மிஷ‌னெரியை அனுப்பி அவ‌ரைப் போஷிப்பேன் இன்னும் அதிக‌ ப‌ண‌ம் கிடைத்தால், ஒரு மிஷ‌னெரியை ஆப்பிரிக்காவுக்கும், ம‌ற்றொருவ‌ரை இந்தியாவுக்கும் அனுப்பி உத‌வி செய்வேன். ப‌ண‌த்தின் மூல‌ம் சுவிசேஷ‌ செய்தியைப் ப‌ர‌ப்புவேன். இவ்வ‌கையாய்க் க‌ட‌வுளின் திட்ட‌ப்ப‌டி உல‌க‌ முழுவ‌திலும் சுவிசேஷ‌த்தைப் பிர‌ச‌ங்கிப்ப‌தில் நான் என் ப‌ண‌த்தைச் செல‌விடுவேன். பின்பு அவ‌ருடைய‌ நிறைவான‌ ஆசீர்வாத‌த்தை நான் எதிர்பார்ப்பேன். சிநேகித‌னே, நீர் உம‌க்காக‌வா அல்ல‌து க‌ட‌வுளின் ஊழிய‌த்திற்காக‌வா ப‌ண‌த்தைத் தேடுகிறீர்? அத‌னால் உம‌க்கு என்ன‌ ப‌ல‌ன் கிடைக்கும்?

ம‌ர‌ண‌ சாச‌ன‌ம்

அநேக‌ர் த‌ங்க‌ள் சொத்தை ம‌ர‌ண‌ சாச‌ன‌ம் எழுதி மிஷ‌னுக்குக் கொடுத்து புண்ணிய‌ம் பெற‌ நினைக்கிறார்க‌ள். தாங்க‌ள் ம‌ர்த்த‌பின் த‌ங்க‌ள் ஆஸ்தியைக் க‌ர்த்த‌ருக்குக் கொடுக்கிற‌வ‌ர்க‌ளுக்கு அவ‌ர் எவ்வித‌ வெகும‌தியையும் வாக்குப்ப‌ண்ண‌வில்லை. "அவ‌ன‌வன் த‌ன் த‌ன் ச‌ரீர‌த்திலே செய்த‌ கிரியைக‌ளுக்குத் த‌க்க‌ ப‌ல‌னை அடைவான்" என்றே 2 கொரி 5: 10 கூறுகிற‌து. நான் உயிரோடிருக்கும்போது செய்த‌ கிரியைக‌ளுக்குத்த‌க்க‌ ப‌ல‌ன் அளிக்க‌ப்ப‌டும் என்ப‌தே அத‌ன் பொருள்.

என் ப‌ண‌த்தின் மூல‌மாய் என்ன‌ நட‌க்கிற‌தென்று நான் அ‌றிய‌ விரும்புகிறேன். என‌க்கு விருப்ப‌மான‌ காரிய‌த்திற்காக‌ என் ப‌ண்ம‌ செல‌வு செய்ய‌ப்ப‌டுகிற‌து என்ற‌ நிச்ச‌ய‌ம் என‌க்கு வேண்டும். நான் உயிரோடிருக்கும‌ட்டும் வ‌ருடாவ‌ருட‌ம் அதைக் கொடுத்துக்கொண்டேயிருக்க‌வேண்டும். இல்லாவிடில் என் ப‌ண‌த்தினால் என‌க்கு யாதொரு பிர‌யோஜ‌ன‌மும் இல்லை.

தியாக‌ம் என்றால் என்ன‌?

தியாக‌த்தின் அர்த்த‌ம் உன‌க்குத் தெரியுமா? ஒரு சிறுமியின் தியாக‌த்தைக் கேளுங்க‌ள். அவ‌ள் பேர் கிரேஸ். த‌ன் 20 வ‌ய‌தில் ஜெயில் ப‌ட்ட‌ண‌த்திலுள்ள‌ பிர‌ஸ்பித்த‌ரின் ச‌பையில் குண‌ப்ப‌ட்டாள். அவ‌ளுக்கு இந்தியாவின்மேல் மிக‌ப் ப‌ற்று ஒருநாள் அவ‌ளுடைய‌ தாய் அவ‌ளைப் பார்த்து, "ம‌க‌ளே, நான் உன‌க்கு ஒரு புது மேல் ச‌ட்டை வாங்க‌ப் போகிறேன்" என்றாள். அவ‌ள் உப‌யோகித்து வ‌ரும் ச‌ட்டை 6 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் வாங்கின‌தும் கிழிந்த‌துமாயிருந்த‌து. ஆனாலும் கிரேஸ் த‌ன் தாயைப் பார்த்து, "அம்மா, நீங்க‌ள் த‌ய‌வு செய்து அந்த‌ப் ப‌ண‌த்தை என்னிட‌ம் கொடுங்க‌ள். நான் அந்த‌ப் ப‌ழைய‌ ச‌ட்டையை இன்னும் ஒரு வ‌ருட‌ம் போட்டுக் கொள்வேன்" என்றாள். அப்ப‌டியே அப்ப‌ண‌த்தைத் தாய் அவ‌ளிட‌ம் கொடுத்தாள். கிரேஸ் அதை வாங்கி இந்தியாவிலுள்ள‌ மிஷ‌னெரிமார்க‌ளுக்கு அனுப்பி வைத்தாள்.

நான் டெயில் ப‌ட்ட‌ண‌த்தை விட்டு வ‌ருமுன் கிரேஸ் வியாதிப்ப‌ட்டாள். ம‌ர‌ண‌ப்ப‌டுக்கையில் அவ‌ள், த‌ன் துணி ம‌ணிக‌ளையெல்லாம் விற்று, கிடைக்கும் ப‌ண‌த்தை இந்தியாவுக்கு அனுப்ப‌வேண்டுமென்ற‌ வாக்குறுதியைத் த‌ன் தாயிட‌ம் கேட்டாள், தாய் க‌ண்ணீரோடு அவ்வித‌மே செய்வேன் என்றாள் கிரேஸ் த‌ன் வெகும‌தியைப் பெரும் ச‌ம‌ய‌ம் நான் ஆண்ட‌வ‌ர்ன் சிங்காச‌ன‌த்தின் அருகே நிற்க‌ ஆசைப்ப‌டுகிறேன். அவ‌ளுடைய‌ இருத‌ய‌ம் இந்தியாவிலிருந்த‌ப‌டியால் அவ‌ளுடைய‌ ப‌ண‌மும் அங்கே சென்ற‌து. என் சிநேகித‌னே இவ்வித‌மான‌ தியாக‌த்தை நீயும் செய்ய‌ ஆய‌த்த‌மா?

என் முத‌ல் விசுவாச‌ வாக்கு

என் முத‌ல் விசுவாச‌ வாக்கை நான் ஒருபொழுதும் ம‌ற‌க்க‌மாட்டேன். நான் டொரான்டோவிலுள்ள‌ ஓர் ஆல‌ய‌த்தில் போத‌க‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டேன். அச்ச‌ம‌ய‌ம் மிஷ‌னெரி மகாநாடு ந‌ட‌ந்துகொண்டிருந்த‌து. நான் மேடையில் அம‌ர்ந்திருக்கையில், வாக்குறுதிக் காணிக்கை வாங்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். என் கையில் கொடுத்த‌ அட்டையை வாசித்தேன் அதில் "நான் க‌ர்த்த‌ரைச் சார்ந்து மிஷ‌னெரி ஊழிய‌த்திற்காக‌....(இவ்வ‌ள‌வு ப‌ண‌ம்) கொடுக்க‌ப் பிர‌யாச‌ப்ப‌டுவேன்" என்று எழுதியிருந்த‌து. அப்பொழுது நான் க‌ர்த்த‌ரை நோக்கி "க‌ர்த்தாவே, நான் ஒன்றும் கொடுக்க‌ முடியாது. நான் வார‌த்திற்கு, சுமார் 100 ரூபாய் ம‌ட்டும் ச‌ம்பாதிக்கிறேன். என‌க்கு ஒரு ம‌னைவியும் ஒரு பிள்ளையும் இருக்கிறார்க‌ள். யுத்த‌மும் ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து விலைவாசியும் வான‌ள‌வாய் உய‌ர்ந்திருக்கிற‌து. வார‌க் க‌டைசியில் என் பையில் இர‌ண்டு காசுகூட‌ மீதி இல்லை. இப்ப‌டியிருக்க‌ நான் எப்ப‌டி உம‌க்குக் கொடுக்க‌க்கூடும்?" என‌ ஜெபித்தேன்.

நான் இத‌ற்குமுன் ஒழுங்கான‌ முறையில் கொடுத்த‌தில்லை. 5 அல்ல‌து 10 ரூபாய் ம‌ட்டும் ரொக்க‌க் காணிக்கையாக‌க் கொடுப்பேன். சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் மிஷ‌னெரி ஊழிய‌த்திற்காக‌ ரூ. 20 கொடுத்த‌துண்டு. ஆனால் விசுவாச‌ வாக்குக் கொடுப்ப‌தும், வாரா வார‌ம் ஒழுங்காய்க் கொடுப்ப‌தும் என‌க்கு நூத‌ன‌மாயிருந்த‌து.

நான் ஒரு போத‌க‌ராயிருந்த‌ப‌டியால் முன் மாதிரி காட்ட‌வேண்டிய‌வ‌னாயிருந்தேன். உட‌னே நான் க‌ர்த்த‌ரை நோக்கி, "க‌ர்த்தாவே என்னிட‌ம் கொடுக்க‌ ஒன்றும் இல்லை. நான் என்ன‌ செய்வேன்?" என்றேன். க‌ர்த்த‌ர்: "உன்னிட‌ம் என்ன‌ இருக்கிற‌து என்று நான் கேட்க‌வில்லை. நான் உன்னை விசுவாச‌ வாக்கு கொடுக்கும்ப‌டி கேட்கிறேன். நீ எவ்வ‌ள‌வு ப‌ண‌த்திற்கு என்மேல் ந‌ம்பிக்கை வைக்க‌ முடியும்?" என்றார். அவ‌ர் கேட்ட‌து என‌க்கு உட‌னே விள‌ங்கிய‌து.

ஒருவேளை ரூ. 20 அல்ல‌து ரூ. 40க்கு நான் க‌ர்த்த‌ர் பேரில் ந‌ம்பிக்கை வைக்க‌லாம் என்று என‌க்குள் எண்ணீனேன். திடீரென‌ அவ‌ர் என்னுடன் திரும்ப‌வும் பேச‌ ஆர‌ம்பித்தார். "ரூ. 200" என்று சொன்னார். நான் அதிர்ச்சிய‌டைந்தேன். ரூ. 200க்கா என‌ ஆச்ச‌ரிய‌த்துட‌ன் சொன்னேன். யாரும் ரூ 200 ச‌ந்தா கொடுக்கிற‌தை நான் கேட்ட‌தில்லை. நான் எப்ப‌டி ரூ 200 கொடுக்க‌ முடியும்? எவ்வாறு நான் சிந்தித்து ந‌டுக்க‌த்துட‌ன் அட்டையில் ரூ 200 என‌ எழுதிக் கொடுத்தேன்.

என‌க்கிருந்த‌ ச‌ந்தோஷ‌த்திற்கு ஓர் அள‌வில்லை. அந்த‌ப் ப‌ண‌த்திற்காக‌ நான் மாதாமாத‌ம் ஜெபித்தேன். நான் எவ்வித‌மாய்ப் பெற்றேன் என்ப‌து என‌க்கே தெரியாது. க‌ட‌வுள் அப்ப‌ண‌த்தை அனுப்பினார். நான் வ‌ருட‌ முடிவுக்குள்ளாக‌ அந்த‌ ரூ 200 முழுவ‌தையும் செலுத்தினேன். அவ‌ர் என‌க்க‌ளித்த‌ ஆசீர்வாத‌ம் அத்த‌னை அதிக‌மாயிருந்த‌ப‌டியால் வ‌ருடா வ‌ருட‌ம் நான் அந்த‌த் தொகையை இர‌ட்டிப்பால்க் கொடுத்து வ‌ந்தேன். மூன்று வ‌ருட‌ம் தொட‌ர்ச்சியாய் இர‌ட்டிப்பாய்க் கொடுத்து அத‌ற்குரிய‌ ச‌ந்தோஷ‌த்தை அனுப‌வித்தேன். க‌ட‌வுள் என்னை ஆசீர்வ‌தித்தப‌டியால் நான் க‌ட‌ந்த‌ 30 வ‌ருட‌ங்க‌ளாக‌, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ரூபாய்க‌ளை நிலைவ‌ர‌மாக‌வும், ஒழுங்காக‌வும் கொடுக்க‌ ஆண்ட‌வ‌ர் என‌க்குப் பெல‌ன‌ளித்து வ‌ருகிறார்.

நான் செய்து நிறைவேற்றி வ‌ருவ‌தையே நீங்க‌ளும் செய்யும்ப‌டி நான் உங்க‌ளை வேண்டுகிறேன். ஈகையின் ச‌ந்தோஷ‌த்தை நான் அறிவேன். க‌ட‌வுளுக்குக் கொடுப்ப‌து இன்னதென்றும் அறிவேன். என‌க்காக‌ நான் ஜீவிக்க‌ முடியாது என‌க்குள்ள‌தெல்லாம் நான் கொடுக்கும‌ட்டும் என் ஜீவிய‌த்தில் ஒரு ப‌ய‌னும் இல்லை என்னுடைய‌ ப‌ண‌த்தில் எவ்வ‌ள‌வு க‌ட‌வுளுக்குக் கொடுப்பேன் என்ப‌த‌ல்ல‌, க‌ட‌வுளுடைய‌ ப‌ண‌த்தில் எவ்வ‌ள‌வு என‌க்காக‌ வைத்துக்கொள்வேன் என்ப‌துதான் காரிய‌ம். "வாங்குகிற‌தைப் பார்க்கிலும் கொக்கிற‌தே பாக்கிய‌ம்" என்னும் ச‌த்திய‌த்தை நான் க‌ண்டுகொண்டேன். என் சிநேகித‌ர்க‌ளே, நீங்க‌ள் சுவிசேஷ‌ ஊழிய‌த்திற்காக‌ உங்க‌ள் செல்வ‌த்தைக் கொடுக்காவிடில் பெரிய‌ ஆசீர்வாத‌ங்க‌‌ளில் ஒன்றை இழ‌ந்து போகிறீர்க‌ள் என்ப‌து திண்ணம்.

வாக்குக் கொடுக்கிற‌ வ‌ழ‌க்க‌ம் ந‌ல்ல‌த‌ல்ல‌ என‌ச் சில‌ர் சொல்லுகிறார்க‌ள். ஏனெனில் உன் வ‌ல‌து கை செய்கிற‌தை உன் இட‌து கை அறியாதிருக்க‌க்க‌ட‌வ‌து என்று கூறியிருக்கிற‌த‌ல்ல‌வா என்பார்க‌ள். தாங்க‌ள் மிக‌வும் சொற்ப‌மாய்க் கொடுக்கிற‌ப‌டியால் த‌ங்க‌ள் வ‌ல‌து கை செய்த‌தை இட‌து கைக்குத் தெரிவிக்க‌க்கூடாது என்று எண்ணியே இவ்வாறு சொல்லுகிறார்க‌ள்.

அவ‌ர்க‌ளுக்குச் ச‌ம‌ப‌ங்கு அளிக்க‌ப்ப‌டும்

ஒரு குழ‌ந்தை கிண‌ற்றில் விழுந்து விட்ட‌து என்று வைத்துக்கொள்வோம். அதைக் காப்பாற்றும்ப‌டி ஒரு ம‌னித‌ன் கிண‌ற்றுக்குள் க‌யிற்றினால் இற‌க்கி விட‌ப்ப‌டுகிறான். அந்த‌ப் பிள்ளையை இர‌ட்சித்த‌த‌ற்காக‌ யாருக்கு வெகும‌தி கிடைக்கும்? கிண‌ற்றுக்குள் இற‌ங்கின‌வ‌னுக்கா? மேலேயிருந்து க‌யிற்றைப் பிடித்த‌வ‌னுக்கா? இர‌ண்டு பேருக்கும் வெகும‌தி கொடுக்க‌ப்ப‌டும் என்று க‌ட‌வுள் சொல்லுகிறார். இதைப்போல‌வே, நீ கீழே போக‌ முடியாத‌வ‌ன். நீ அந்நிய‌ நாட்டை ஒருபொழுதும் பார்க்க‌வில்லை. ஆனால் நீ க‌யிற்றைப் பிடிக்கிற‌வ‌னாயிருக்க‌லாம். நீ ஒரு ப‌தினாளை அனுப்ப‌க்கூடும். அவ்வாறு நீ செய்து உன் ப‌ண‌த்தை அவ‌னுக்காக‌க் கொடுத்தால் உன்னுடைய‌ வெகும‌தி, வெளிநாட்டுக்குப் போன‌ ம‌னித‌னுடைய‌ வெகும‌தியைப்போல‌வே இருக்கும்.

நெருப்பு அணைக்கும் வ‌ரிசையிலே ஒவ்வொருவ‌ரும் இருக்க‌வேண்டும். நீ கடைசி நுனியிலிருந்து த‌ண்ணீரை நெருப்பில் ஊற்றுகிற‌வ‌னானாலும், இடையில் நின்று த‌ண்ணீர் வாளியை வாங்கி அடுத்த‌வ‌னுக்குக் கொடுக்கிற‌வ‌னானாலும், கிண‌ற்றிலே த‌ண்ணீரை மொள்ளுகிற‌வ‌னானாலும் எல்லாரும் ஒன்றுதான். கேள்வி என்ன‌வெனில் அந்த‌ வ‌ரிசையில் நீ இருக்கிறாயா? நீ ஏதாவ‌து செய்து கொண்டிருக்கிறாயா? அல்ல‌து நீ வேடிக்கை பார்க்கிற‌வ‌னாய் ம‌ட்டும் இருக்கிறாயா? 'ஒவ்வொரு கிறிஸ்த‌வனும் ஒரு மிஷ‌னெரி' என்ப‌தே ந‌ம‌து குறுக்கோள்.

கொடுக்க‌க்கூடிய‌வ‌ர்க‌ள்:

த‌னி ஆளாக‌வும், அலுவ‌ல் செய்கிற‌வ‌ராக‌வும், போத‌க‌ராக‌வும்,

No comments: